அருள்மிகு அரங்கநாதசாமி திருக்கோயில், காரமடை, கோவை - 641104, கோயம்புத்தூர் .
Arulmigu Aranganathasamy Temple, Karamadai, Karamadai - 641104, Coimbatore District [TM009778]
×
Temple History
தல வரலாறு
கொங்கு வள நாட்டில் புகழ் பெற்ற தொழில் நகரமாகிய கோயம்புத்துர் நகரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் கோவையிலிருந்து 29 கி.மீ தொலைவிலும், மேட்டுப்பாளையத்திலிருந்து 7 கி.மீ தொலைவிலும் காரமடை உள்ளது.
அக்காலத்தில் இங்கு பசு மாடுகள் நிறைந்து காணப்பட்டன வாங்கக் குடம் நிறைக்கும் பசுக்களை மேய்ப்பதும் அதன் முலம் தங்கள் வாழ்க்கையை நடத்துவதுமாக இருந்தார்கள். தூயவன் வீற்றிருந்த காரை வனத்தினிடையே சுரபியாம் காராம்பசு ஒன்று சுரந்த மடியுடன் பாலை, பெருமாள் இலங்கும் புதரின் மேல் பக்தி சுகாநுபவத்தில் நித்தமும் பெய்து திரும்புகின்ற காரணத்தை அறியாத தொட்டியன், பால் இன்றி திரும்பும் காரணத்தை அறியமுற்பட்டான். ஒரு நாள் அப்பசுவின் பின் தொடர்ந்து செல்லும்போது பசுவானது ...கொங்கு வள நாட்டில் புகழ் பெற்ற தொழில் நகரமாகிய கோயம்புத்துர் நகரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் கோவையிலிருந்து 29 கி.மீ தொலைவிலும், மேட்டுப்பாளையத்திலிருந்து 7 கி.மீ தொலைவிலும் காரமடை உள்ளது.
அக்காலத்தில் இங்கு பசு மாடுகள் நிறைந்து காணப்பட்டன வாங்கக் குடம் நிறைக்கும் பசுக்களை மேய்ப்பதும் அதன் முலம் தங்கள் வாழ்க்கையை நடத்துவதுமாக இருந்தார்கள். தூயவன் வீற்றிருந்த காரை வனத்தினிடையே சுரபியாம் காராம்பசு ஒன்று சுரந்த மடியுடன் பாலை, பெருமாள் இலங்கும் புதரின் மேல் பக்தி சுகாநுபவத்தில் நித்தமும் பெய்து திரும்புகின்ற காரணத்தை அறியாத தொட்டியன், பால் இன்றி திரும்பும் காரணத்தை அறியமுற்பட்டான். ஒரு நாள் அப்பசுவின் பின் தொடர்ந்து செல்லும்போது பசுவானது பாலை தானாவே சுரக்கும் புதரைக் கண்டு ஆவேசமாகி கொடுவாளை எடுத்து புதரை வெட்டிட எண்ணியபொழுது புனிதன் திருவரங்கன் எழுந்தருளி தொட்டியனுக்கு காட்சி அளித்தார். தொட்டியன் இவ்வரிய பெருமாள் சேவையை கண்டுமுர்ச்கையானான், பின் தொட்டியனைக் காணாத காரணத்தால் அவனைத்தேடி ஊரார் பட்டர் தலைமையில் சென்று பார்த்தனர். பின் பட்டர் கண்டு பகவான் என்று உணர்ந்தனர். அக் கூட்டத்தில் ஒருவருக்கு ஆவேசமாகி காரணங்காட்டி அரங்கநாதர் காட்சி கொடுத்தனை உணர்ந்து அப்போது அக்கூட்டத்தினர். தீப்பந்தங்களை கையில் ஏந்தி தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் ஆகியவற்றை கலந்து வைத்து அரங்கனுக்கு படைத்து வழிபட்டு, ரங்காபராக் கோவிந்தாபராக் (ரங்கன் வருகிறான், கோவிந்தன் வருகிறான்) என முழங்கிஆடிப்பாடி பக்தி சுகாநுபவத்தில் தங்கள் கைகளிலுள்ள தீப்பந்தங்களை பெருமாளாக எண்ணி அவனுக்குப் படைத்த வாழைப்பழம் சர்க்கரை கலந்த பிரசாதத்தையே கவளமாக தாங்களும் உண்டு. மற்றவர்களுக்கும் கொடுத்து பக்தியின் எல்லைக்கே சென்றார்கள் (இந்த பக்தி சுகாநுபவமே தற்போதும் பந்த சேவை. கவாள சேவை என்று திருத்தேர் நிலைக்கு வந்து சேர்ந்த பின் நடந்து வருகிறது) பின் இவ்வரங்கநாயகி சமேத அரங்கநாதனை பட்டர் வம்சத்தவர் தலைமையில் ஊரார் கூடி தம்மை பரிபாலிக்க வந்த பரம் பொருளே இவ்விடம் வீற்றிருக்கிறார் என்ற விபரமறிந்து இப்பெருமாளுக்கு அட்டபந்தனமும் அழகு மண்டபமும் பிரகார கோபுரமும் பிரபுக்களினாலே திருப்பணி முடித்து வழிப்படத் தொடங்கினர்.
தல பெருமை
தல பெருமை
தலைப்பு விவரம் - தலச்சிறப்பு
சிறப்பு விளக்கம் - சேர, சோழ, பாண்டிய நாடுகளுடன் தொண்டை கொங்கு நாடு ஆகிய இரண்டு நாடுகளும் சேர்ந்த தமிழ்நாட்டில் கொங்கு நாட்டின் 24 பிரிவு நாடுகளாக விளங்கிய வற்றில் ஆறை நாட்டின் அதிசயமாக நீலமாமலை சூழ் வானி ஆற்றங்கரை தனியே காரை வனங்கள் சூழ்ந்த காரையம்பதியில் காராம்பசுவால் கண்டறியப்பட்டு, மதுரை மன்னன் திருமலை நாயக்கரால் ஆலயமும், திருமதில்களும், திருவீதிகளும், அழகு மிகு அலங்காரத் திருரதமும், தெப்பக்குளமும், நந்தவனமும் ஏற்படுத்தப்பட்டு, வைணவ திருத்தலங்களில் கொங்கு திவ்ய தேசமாய் போற்றப்படும். காரைமடை அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வரலாற்றுச்...தல பெருமை
தலைப்பு விவரம் - தலச்சிறப்பு
சிறப்பு விளக்கம் - சேர, சோழ, பாண்டிய நாடுகளுடன் தொண்டை கொங்கு நாடு ஆகிய இரண்டு நாடுகளும் சேர்ந்த தமிழ்நாட்டில் கொங்கு நாட்டின் 24 பிரிவு நாடுகளாக விளங்கிய வற்றில் ஆறை நாட்டின் அதிசயமாக நீலமாமலை சூழ் வானி ஆற்றங்கரை தனியே காரை வனங்கள் சூழ்ந்த காரையம்பதியில் காராம்பசுவால் கண்டறியப்பட்டு, மதுரை மன்னன் திருமலை நாயக்கரால் ஆலயமும், திருமதில்களும், திருவீதிகளும், அழகு மிகு அலங்காரத் திருரதமும், தெப்பக்குளமும், நந்தவனமும் ஏற்படுத்தப்பட்டு, வைணவ திருத்தலங்களில் கொங்கு திவ்ய தேசமாய் போற்றப்படும். காரைமடை அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதோர் ஆலயமாகும்.
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி
உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாளணைவீர் தக்க கீர்த்தி
எனத் திருமங்கையாழ்வார் திருமொழிக்கேற்ப மூர்த்தி சிறிய தாயினும் கீர்த்தியில் பெரியோனாய் வேண்டும் வரம் நல்கும் வேங்கடேசனாய் அருளை அள்ளித்தரும் அரங்கநாதனாய் விளங்கி
மெய்மையை விரிந்த சோலை
வியன் திருவரங்கம் மேய
செம்மையைக் கருமை தன்னை
திருமலை யொருமையானை
எனத் திருமங்கை மன்னன் போற்றியது போல்
கொங்கு திருவரங்கம் எனவும் கொங்கு திருமலை எனவும் போற்றப்படும்.இத்தலத்தில் மூலவர் அரங்கநாதப் பெருமாளாகவும், உற்சவர் வெங்கடேச அச்சுதன் எனவும் விளங்குவது தனிச்சிறப்பு
ராமபாணம்
கொங்கு திருநாடாம் கோவையம்பதி காரை மாநகரினிலே கலியுக தெய்வமாய் அருள்பாலிக்கும் அரங்கன் திருக்கோயிலிலே அருவினையையும் உடல் அல்லலையும் தீர்க்கும் அற்புத ஆயுதமாய் உள்ளது ராமபாணம்.
தோற்றம்
தாமிரப் பட்டையாலான தகட்டில் ஒரு புறம் சயனத்திருக்கோலத்தில் அரங்க பெருமானின் திருவுருவமும் மற்றொரு புறம் மகாசுதர்சன யந்திரத்தின் பீஜாட்சரங்களும் பொறிக்கப்பட்டு இருபுறமும் வெள்ளித்தகடுகளால் போர்த்தப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டு உள்ள ராமபாணத்தைத் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் தலையில் வைத்து ஆசீர்வாதிக்கப்படுகிறது. அவ்வாறாக வைத்துக் கொண்டு செல்லும் பக்தர்களின் தீராநோய்களும் தீர்ந்து குணமடைவது இத்தலத்தின் மகத்துவமாகும்.
ராமபாண மகிமை
ஸ்ரீ ராமபிரானின் ராமபாணம் எதிர்வரும் எந்த தீயசக்திகளையும் அழிக்க வல்லது. அதுபோல இந்த ராமபாணமானது ஏவல், பில்லி, சூன்யம் போன்ற தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களின் வினைகளையும், சித்த பிரமை, மனநலம் குன்றியவர்களின் தீரா நோய்களைத் தீர்க்க வல்லதாக உள்ளது.
ராமபாணத்தின் சிறப்பு
அரங்கனின் திருவிளையாடல் காரணமாக பெருமாளுடன் ஊடல் கொண்டு அரங்கநாயகி தாயார் கோபித்துக் கொண்டு பிரகஸ்பதிமலை என்றழைக்கப்பட்ட தற்போது பெட்டத்தம்மன் மலை என அழைக்கப்படும். மலைக்குகை சென்று அங்கு தங்கி வாசம் புரிந்ததாகவும் அவரைச் சமாதானப்படுத்தி அழைத்து வரும் விதமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ஒரு மரபாக பிரம்மோற்சவ திருவிழாவில் ஐந்தாம் நாள் நடக்கக் கூடிய திருக்கல்யாணச் சேவைக்கு அழைத்து வரும் ஒரு திருவிழாவாக அம்மன் அழைப்பு என்ற வைபவம் வேறு எங்கும் நிகழாத காண இயலாத ஒரு நிகழ்ச்சி, அர்ச்சகர் ஒருவர் அரங்கள் அருளுடன் மலைக்குச் சென்று தாயார் அருளுடன் ஆவேசமாகத் திருக்கோயிலுக்கு வரும் நிகழ்ச்சியின் பொழுது அம்மனை வரவேற்று எதிர் கொண்டு அழைக்கும் முகமாக ராமபாணத்தைக் கையில் கொடுக்க அவரும் அதை நான்கு திருவீதிகளிலும் கைகளில் சுழற்றிக் கொண்டு மேளதாள, தாரை தப்பட்டை வாத்தியமங்களுடன், வாணவேடிக்கை முழங்கி ஆரவாரத்துடன் திருக்கோயிலுக்கு அழைத்து வரும் காட்சியைக் காண கோடி கண்கள் வேண்டும். இந்நிகழ்ச்சி வேறு எங்குமே காண இயலாத ஓர் சிறப்பு அம்சமாகும்.
தல விருட்சம் காரைமரம்
காரைத் தழைக்குக் கணக்காகவே புளியைச்
சோரப்பெய் தாக்கி சுவைத்திடின்கேள் பாரதனில்
விள்ளக்கடுப்பு ரத்தம் விட்டேகுமையமிலை
உள்ளக் குணமிதுவா முன்.
எனச் சித்தர்வாக்கின்படி அருபெரும் மருந்தாய் விளங்கக்கூடிய காரைமரம், தானாக தோன்றி சுயம்பு மூர்த்தியாக அரங்கன் வீற்றிருக்கும் இத்தலத்தில் தானாக விளைந்து மரமாக வளர்ந்து அரியதோர் தல விருட்சமாக அமைந்தது ஒர் அற்புதச் சிறப்பாகும்.
கொங்குள வள நாட்டில் காரை வனம் சூழ்ந்த பகுதியில் நீர்நிலை மடைகள் பலவும் இருந்த காரணத்தினாலே இப்பகுதி காரைமடை என்ற பெயருடன் விளங்கி வருகிறது.
அப்படிப்பட்ட வனப்பகுதியில் அரங்கன் அருட்கோலம் கொண்டு அருந்தவ நிலையில் வீற்றிருந்து அருள்பாலித்து வந்த நிலையில் கி.பி.16ம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயரின் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட நாயக்க அரசர்கள் இப்பகுதியை ஆட்சிமை புரிந்த காலத்தில் அவர்கள் வழிவந்த மதுரை திருமலை நாயக்கர் இப்பகுதியில் முகாமிட்டு இருந்த சமயம் அவரது முதுகில் ராஜபிளவை என்னும் தீராக்கடும் நோய் தாக்கி அவதியுற்றிருந்த நிலையில் இறையோனை வேண்டிய பொழுது அரங்கன் அவரது கனவில் தோன்றி இத்தலத்திற்குச் சென்று தல விருட்சமாகிய காரைத்தழையைப் பறித்து மருந்ததாக உட்கொண்டால் நோய் குணமாகும். என அருள அவ்வாறே தன் படை பரிவாரங்களுடன் வந்து தன் வைத்தியர்களைக் கொண்டு காரைத்தழையை மருந்தாக்கி சாப்பிடவே நோய் பரிபூரணமாக தீர்ந்து குணமானதாக வரலாறு கூறுகிறது.
தீரா நோயைத் தீர்த்த திருமாலரங்கனை வணங்கி மிக அற்புதமான திருக்கோவிலையும் திருக்கல்யாண மண்டபம்,திருமதில்கள், தெப்பக்குள பரிவேட்டை மண்டபம், நந்தவனம், மற்றும் நான்கு மாட வீதிகளையும் அமைத்து அழகுமிகு திருத்தேர் அமைத்து விழாக் கொண்டாடியும் சிறப்பு செய்தார்.
மருத்துவப் பயன்
என்னும் மூலிகை தாவர பெயர் கொண்ட காரைமரம் மருத்துவப் பயனுடையவை இலையும் முள்ளும் மாற்றடுக்கில் அமைந்த இந்த விருட்சத்தின் தழை, கனிகள், உண்ணக்கூடியவை நரம்பு, சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் தன்மை உடையது. தழைகைளைச் சாப்பிட வயிற்றுக்கடுப்பு, இரத்தசீதபேதி முதலான வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களையும் போக்க வல்லது. கனிகளை இருவேளை சாப்பிட்டு வர இரைப்பை நுரையீரல் முதலிய உள் உறுப்புகள் பலப்படும் என சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
மக்கட்பேறு மகிமை
நோய்களைத் தீர்ப்பது மட்டுமின்றி குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இம்மரத்தில் தொட்டில் கட்டி மரத்தைச் சுற்றி வலம் வந்தால் புத்திர பாக்யம் தவறாது கிடைப்பது. அரங்கனின் அருட்செயலே. திருமணம் கை கூடாதவப்கள் திருமணத்தடை ஏற்படுபவர்கள் இம்மரத்தில் மாங்கல்ய சரடு கட்டி வழிப்பட்டு வந்தால் தடைப்பட்ட திருமணயோகம் கைகூடி வருவது மற்றோர் சிறப்பு,
நீருற்றி மரம் வளர்ப்பது இயல்பு ஆனால் இப்பகுதி மக்களால் தங்களால் கொண்டு வந்து ஊற்றும் பசும்பாலால் இம்மரமானது வளர்ந்து கல்மரம் போல் காட்சியளிப்பது ஒர் வியப்பான விஷயம். தல விருட்சமான காரைமரம் ஓர் சஞ்சீவி மருந்தாய் திகழ்ந்து வருகிறது.
தாசர்கள் சிறப்பு
எம்பெருமானுக்கு ஐந்து ஆயுதங்கள் அணிகளாக விளங்குவதை போல் அரங்கன் அடியார்களான தாசர்கள் ஐந்து இலச்சினைகளாக விளங்கக்கூடிய 1.தாபம் எனப்படும் முத்திரை தரித்தல், 2. புண்ட்ரம் எனப்படும் திருமண்காப்பு தரித்தல், 3. தாஸ்ய நாமம் அல்லது அடிமை திருநாமம் வைத்து கொள்ளல், 4. மந்திரம், 5. யாகம் எனும் திருஆராதனம்.
குருவிடம் நல்வழிகளை அறிந்து தன் உடலில் பன்னிரண்டு இடங்களில் திருமண் காப்பு தரித்துக் கொண்டும் கழுத்தில் துளசி மணி மாலை அணிந்து கால் மற்றும் இடுப்பில் சதங்கைகளைக் கட்டிக் கொண்டு, கையில் சங்கு, சேகண்டி, பிரம்பு, கத்தி, தோல்பை, காதணிகலன், மஞ்சளாடை போன்ற பதினெட்டு வகை சின்னங்களைத் தரித்துக் கொண்டு அருளுடனும் ஆவேசத்துடனும் ஆலயம் சென்று அரங்கனைக் கண்டு அகமலர்ந்து தன்னை உணர்ந்து பிறர்க்கும் உணர்த்துவதே அரங்கதாசனின் சிறப்பாகும்.
தாசர்களுக்கு படைக்கும் படையலின் தத்துவம்
புரட்டாசி மாதம் அரங்கனுக்கு உகந்த மாதம் புரட்டாசி சனிக்கிழமைகளில் அரங்கனின் தாசர்களுக்கு படையில் இடும் வழக்கம் இருந்து வருகிறது. நமது முன்னோர்கள் மஹாளய பட்சம் பதினைந்து நாளும் பூமிக்கு வந்து தங்கிச் செல்வதாகவும், அந்தச் சமயத்தில் திதி போன்ற காரியங்களைச் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பதினாலும், தங்களது வீடுகளில் திதி போன்ற காரியம் செய்ய இயலாத நிலையில் உள்ளவர்கள் பெருமாள் சன்னதிகளில் உள்ள தாசர்களுக்குப் படையலிட்டால் அது முன்னோர்க்குப் போய் சேரும் எனக் கருதி அமுதுக்குத் தேவையான அரிசி, பருப்பு, புளி, காய்கறிகள் முதலிய அனைத்துப் பொருட்களை வாழை இலையில் படைத்து அரங்கதாசர்களின் ஆசியைப் பெற்றுச் செல்கின்றனர். வேறு எங்கும் காணாத வகையில் நூற்றுக்கணக்கான தாசர்களிடம் பக்தர்கள் படையில் செலுத்தி தங்கள் முன்னோர்களின் பித்ரு கர்ம காரியங்களைச் செய்து ஆசி பெற்றுச் செல்வது இத்தலத்திற்கு மட்டுமே உண்டான சிறப்பு
தண்ணீர் சேவை
தேர்த்திருவிழாவின் போது தேர்நிலை வந்து நின்றவுடன் தாசர்களின் சதங்கை ஒலி காரைநகர் முழுவதும் ஒலிக்கத் துவங்கி விடும். மஞ்சளாடை அணிந்து கால்வெண்டயம் ஒலிக்க கருட தீர்த்த புஷ்பகரணியில் இருந்து (தெப்பகுளம்) தோல்பையில் தீர்த்தத்தைக் கொணர்ந்து அரங்கன் திருவடியில் சேர்த்து அரங்கனை குளிர்வித்துப் போற்றுதலுக்குரிய சிறப்பைச் செய்கின்றனர். இந்தச் சேவையைச் செய்ய இவர்கள் தங்கள் குருவிடம் பூமுத்திரை வைத்திருக்க வேண்டியது அவசியம்.
கவாள சேவை
பழம், சர்க்கரை, பால், தயிர், திராட்சை ஆகியவற்றைக் கலந்து தாசர்கள் முன்பு படைக்கிறார்கள்.இந்த நாட்களில் எத்தனை பழங்களைச் சாப்பிட்டாலும் எந்த பாதிப்பு ஏற்படாதது அரங்கனின் அற்புதமே. அதர்வேண வேதத்தில் கவாளம் கொடுக்கும் முறை வருகிறது.யாகத்தில் கொடுப்பது ஆகுதி எனப்படும். அதைத் தெய்வங்களும் தேவர்களும் பெறுவதாகக் கூறுவர். சிறு தெய்வ வழிபாடுகளிலும் கவாளம் கொடுத்தால் ஒர் அங்கமாகும்.
பந்த சேவை
தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி
திகழ் திருச்சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
எனப் பெரியாழ்வார் அருளிய படி பெரிய முத்திரை வைத்துள்ள அரங்கதாசன் கடும் விரதத்துடன் தாரை, தப்பட்டை, பம்பை, தவுல் போன்ற தோல்கருவிகள் ஒலி எழுப்ப சிறியது முதல் மிகப்பிரம்மாண்டமான பந்தங்களைக் கையில் எடுத்துக்கொண்டு திருவீதி வலம் வந்து அரங்கனை வணங்கி பின் தன் குருவிடம் சென்று குடும்பத்துடன் அவர்தம் ஆசிகளைப் பெற்று அவர் தரும் தீர்த்தம் பிரசாதங்களைத் தானும் உண்டு தன்னுடன் வந்த அனைவருக்கும் வழங்கி தங்களுடைய கடும் விரதத்தை முடித்துக் கொள்வர். பரிவேட்டை நாளாகிய அன்று காணும் இடம் எல்லாம் கூட்டம் கூட்டமாகக் கைகளில் பந்தங்களை ஏந்திக் கொண்டு தாசர்கள் கோவிந்தா பராக் ரங்கா பராக், கோவிந்தா கோவிந்தா எனப் பெருங்குரலில் கோஷமிட்டுச் செல்லும் காட்சி பார்ப்போரை பரவசபடுத்தும்.