கொங்கு வள நாட்டில் புகழ் பெற்ற தொழில் நகரமாகிய கோயம்புத்துர் நகரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் கோவையிலிருந்து 29 கி.மீ தொலைவிலும், மேட்டுப்பாளையத்திலிருந்து 7 கி.மீ தொலைவிலும் காரமடை உள்ளது. அக்காலத்தில் இங்கு பசு மாடுகள் நிறைந்து காணப்பட்டன வாங்கக் குடம் நிறைக்கும் பசுக்களை மேய்ப்பதும் அதன் முலம் தங்கள் வாழ்க்கையை நடத்துவதுமாக இருந்தார்கள். தூயவன் வீற்றிருந்த காரை வனத்தினிடையே சுரபியாம் காராம்பசு ஒன்று சுரந்த மடியுடன் பாலை, பெருமாள் இலங்கும் புதரின் மேல் பக்தி சுகாநுபவத்தில் நித்தமும் பெய்து திரும்புகின்ற காரணத்தை அறியாத தொட்டியன், பால் இன்றி திரும்பும் காரணத்தை அறியமுற்பட்டான். ஒரு நாள் அப்பசுவின் பின் தொடர்ந்து செல்லும்போது பசுவானது ...