


தல வரலாறு

வீரபாண்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தலவிளக்கம் தாய்த்தெய்வம் குடும்பத்திற்கு மட்டும் அன்றி, நாட்டிற்கும் நல்லது செய்பவள் தாய்தான் என்கிற சிந்தனை மிகப்பழங்காலம் முதல் விளங்கி வருகிறது. எல்லாச் சமயங்களும் ஏதோ ஒருவகையில் தாய்த் தெய்வத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.தமிழில் உள்ள அம்மா என்ற சொல்தான் பல மொழிகளில் விரிந்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். மொழியில் உள்ள உமா என்பது அம்மாவின் திரிபுதான் வட என்கிறார்கள்.உலகம் முழுவதும் ஒருகாலத்தில் தாய்வழிச் சமுதாயம் தாள் விளங்கிவந்துள்ளது. அதாவது தாய்தான் குடும்பத் தலைவியாக விளங்கினாள். சொத்துரிமை அவளுக்குத்தான் உரியது: ஆட்சி உரிமையும் அவளுக்குத் தான். மதுரையில் அல்லி அரசாண்டாள் என்பது, அந்தநாட்டில் ஆட்சிவரிமை பெண்னுக்குத்தான் என்பதைப் பேசுகிறது மதுரை மீனாட்சியின் தாக்கம் அதன் எச்சமே. சைவத்தில் அருளும் தன்மை அம்பிகைக்கு மட்டுமே...வீரபாண்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தலவிளக்கம் தாய்த்தெய்வம் குடும்பத்திற்கு மட்டும் அன்றி, நாட்டிற்கும் நல்லது செய்பவள் தாய்தான் என்கிற சிந்தனை மிகப்பழங்காலம் முதல் விளங்கி வருகிறது. எல்லாச் சமயங்களும் ஏதோ ஒருவகையில் தாய்த் தெய்வத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.தமிழில் உள்ள அம்மா என்ற சொல்தான் பல மொழிகளில் விரிந்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். மொழியில் உள்ள உமா என்பது அம்மாவின் திரிபுதான் வட என்கிறார்கள்.உலகம் முழுவதும் ஒருகாலத்தில் தாய்வழிச் சமுதாயம் தாள் விளங்கிவந்துள்ளது. அதாவது தாய்தான் குடும்பத் தலைவியாக விளங்கினாள். சொத்துரிமை அவளுக்குத்தான் உரியது: ஆட்சி உரிமையும் அவளுக்குத் தான். மதுரையில் அல்லி அரசாண்டாள் என்பது, அந்தநாட்டில் ஆட்சிவரிமை பெண்னுக்குத்தான் என்பதைப் பேசுகிறது மதுரை மீனாட்சியின் தாக்கம் அதன் எச்சமே. சைவத்தில் அருளும் தன்மை அம்பிகைக்கு மட்டுமே உரியது வைணவத்தில் அம்பாள்தான் திரு ஸ்ரீ யாக உள்ளாள். அவளில்லாமல், பெருமாள் இல்லை. ஸ்ரீயப் பதியிளன் என்பதும் திருஅமர் மார்பினள் என்பதும் நினைக்கத்தக்கது. மாரியம்மன் அந்தவகையில், மாரியம்மன் தமிழ்நாட்டின் தாய்த் தெய்வம். ஒவ்வொரு ஊரிலும் இவளுக்கு ஒரு கோயிலுண்டு. ஊர்ப்பிடாரி என்பதும் இவள்தான். இவள் சாந்தசொரூபியாக இருக்கும் பட்சத்தில் கிழக்கு நோக்கியும், உக்கிரதேவதையாக இருக்கும் பட்சத்தில் வடக்கு நோக்கியும் விளங்குவாள். இவளுடைய வடிவம் பெரும்பாலும் அமர்ந்த கோலம் அபூர்வமாக சில இடங்களில் நின்ற கோலத்தில் இருக்கும். அந்தவகையில் மாரியம்மன் ஒவ்வொரு ஊரின் காவல் தெய்வம் ஒவ்வொருவரின் உற்ற தெய்வம் ஏழை எளிய மக்களின் இதய தெய்வம். கோவை பெரியநாய்க்கன்பாளையம் அருகில் உள்ளது (எண்4) வீரபாண்டி எனும் கிராமம். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், தென் கோடியிலுள்ள இங்குவந்து குடி அமர்ந்தனராம். அவர்கள் தங்களுடன் தாங்கள் நெடுங்காலமாக வழிபட்டுவந்த மாரியம்மை யை இங்கே பிரதிஷ்டை செய்தனர். அம்பிகை தன்னை அண்டிவந்த பக்தர்களுக்கு அருள் வழங்க ஆரம்பித்ததால் பக்தர் கூட்டமும் அலைமோதியது. புதியதாக மாரியம்மன் திருஉருவச் சிலை செய்து நிறுவினர். அம்பிகை தன் காலடியில் மகிஷாசுரன் என்பவனை வதைக்கும் தோற்றத்துடன் சிலை உள்ளது.திருக்கோயில் எண்கோணவடிவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூலவிக்கிரக அம்பிகை வலதுகையில் உடுக்கையும், இடது கையில் சூலமும், இன்னொரு வலது கையில் கத்தியும், இடது கையில் கபாலமும், அழல்சிகை முடியுடன் விளங்குகிறாள். மாரியம்மையின் இயல்பு தொற்று நோய் தீர்த்தல், கண்ணோய் தீர்த்தல் வெப்பு நோய் தீர்ப்பவளாய், வேப்பிலை கைக் கொண்டவளாய் கொப்புளம் அம்மையெனும் கொடியநோய் தவிர்ப்பவளாய் எப்பொழுதும் கருணைஉளம் இயல்பாகப் பெற்றவளாய். செப்பரிய மேன்மையளாய்த் திகழ் சக்தி மாரியம்மை என்பது பாடல் மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள். ஆகவே. மழைவரம் அளித்தலும், அதனால் ஏர்வளம் பெருகச் செய்தலும் கிராமதேவதையான இவள் செய்கையாம். ஊர்களிலும் நகர்களிலும் உயர்வு பெருங் கோயில்கொண்டு சீர்உலவு கிராமத்தின் சிறப்பு மிக்க தேவதையாய் ஏர்பெறவே எழுந்தருளி இலங்கும் அன்னை பராசக்தி பேர்பரவ வான்மழையைப் பெய்வித்துக் காவல் செய்வாள். கண்நோய் தீர்த்தலும் இந்த அம்பிகையின் செயல் கண்ணிழந்தவர் கண்ணொளி பெருவதும் வாய்ச்சொல் எண்ணிழந்தவர் இன்னுரை பகர்வதும் அறிவுக் திண்ணிழந்தவர் வைத்தியம் தெளிவதும் சிறப்பு நண்ணிவந்தவர் நலம் பலப் பெருவதும் இத்தலமே திருவிழாக்கள் இக்கோயிலின் பூவைத்து வரம் கேட்டல் மிகவும் சிறப்புடையது. இத்திருக்கோயிலுக்கு பிரதி வாரம் வெள்ளிக்கிழமை, மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் ஆண்டுத்திருவிழா (வைகாசி மாதம்) ஆகிய நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து தங்கி வழிபட்டுச் செல்வர். இக்கோயிலிலிருந்து அரைக் கிலோமீட்டர் தொலைவில் ஆலமரத்துக்கிணறு எனும் தீர்த்தக்கிணறு உள்ளது. திருவிழாநாட்களில் பக்தர்கள் இதில் நீராடி ஈர ஆடையுடன் அடியளந்து கோயிலை நோக்கி அங்கப்பிரதட்சணம் செய்வார்கள். அம்மனின் திருக்கல்யாண தினம் சிறப்பான திருவிழா. இதில் நாய்க்கனூரை மாப்பிள்ளை வீடாகவும், வீரபாண்டியை பெண்வீடாகவும் வைத்து மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடை பெறும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற அலகு குத்தித் தேர் இழுப்பது ஒரு முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. திருவிழாநட்களில் ஊரார்கள் தங்கள் சொந்த வீட்டு விழாக்களை தள்ளிவைத்து விட்டு திருக்கோயில் திருவிழாவில் ஈடுபடுவார்கள். சித்தர்சாமி இங்கு 200 ஆண்டுகளுக்கு முன் சித்தர்சாமி எனும் சித்தர் இருந்தாராம். பல அற்புதங்களைச் செய்தும், எதிர்கால நிகழ்ச்சிகளைச் சரியாக முன்கூட்டியே சொல்லியும், மக்களை நல்வழிப் படுத்தியுள்ளார். ஒரு முறை இவர் சித்தியடைந்து விட்டார் என்று கருதி சமாதியில் வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் தீடீர் என்று கால் பெருவிரல் மட்டும் அசைந்து இருக்கிறது. மக்கள் தவற்றை உணர்ந்து மன்னிக்கும்படி வேண்டினர். சித்தர் மீண்டும் பல ஆண்டுகள் உயிரோடு இருந்தாராம். இவ்வளவு பெருமை கொண்ட வீரபாண்டி மாரியம்மன் திருக்கோயில் ஒரு ஏக்கர் 10 சென்ட் அளவில் அமைந்து உள்ளது. சுற்றியுள்ள அனைத்துக் கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து அம்பிகையைப் பணிந்து, கவலை நோய் நீங்கிச் செல்கிறார்கள்.
தல பெருமை

அமைவிடம் /முகவரி எண் 4 வீரபாண்டி ,கோவை வடக்கு வட்டம், கோவை மாவட்டம் 641019. தமிழ் நாடு ...அமைவிடம் /முகவரி எண் 4 வீரபாண்டி ,கோவை வடக்கு வட்டம், கோவை மாவட்டம் 641019. தமிழ் நாடு (காந்திபுரம் பேரூந்துநிலையத்தில் இருந்து பேரூந்து 32 இயங்குகின்டறது சுமார் 10 ) (ரயில் நிலைய பேரூந்துநிலையத்தில் இருந்து பேரூந்து 32 இயங்குகின்டறது சுமார் 12) திறந்திருக்கு நேரம் காலை 06.00 மணி முதல் காலை 1.00 மணி வரை மாலை04.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலவ மூர்த்திகள் அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு விநாயகர் பரிவார மூர்த்திகள் நீலி, சூலி வராஹி அம்மன், சாமுண்டி, துர்க்கை, பிராம்ஹி, மகாலக்ஸ்மி கன்னிமார் சிங்கம், பலிபீடம் உப சன்னதி அருள்மிகு மாகாளியம்மன் சிங்க வாகனம் பலிபீடம் உப திருக்கோவில் ஆதி விநாயகர் எலி பலிபீடம் தல சிறப்பு/ பொது தகவல் அருள்மிகு மாரியம்மன் சுமார் 400 ஆண்டுகளாக அமர்கின்ற கோலத்தில் அபூர்வ திருமேனியுடன் அருள்பலிக்கறார். அருள்மிகு மாகாளியம்மன் சுமார் 450 ஆண்டுகளாக அமர்கின்ற கோலத்தில் அருள்பலிக்கறார். அருள்மிகு ஆதி விநாயகர் சுமார் 500 ஆண்டுகளாக அமர்கின்ற கோலத்தில் அருள்பலிக்கறார். முக்கிய திருவிழா வைகாசி மாதத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கல்யாணம் உற்சவம் ,பூச்சாட்டு முதல் கம்பம் நடுதல் மற்றும் அழகு குத்தி தேர் இழுத்தல் அன்னதானம் வரை சுமார் 14 நாட்கள் விமரிசையாக நடைபெறும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் நேர்த்திக்கடன் செலுத்துவர். நடைபெறும் மாதாந்திர உற்சவ பூஜைகள் அருள்மிகு மாரியம்மன் மாதத்தில் நான்கு வார வெள்ளி கிழமை அபிஷகம் மற்றும் பூஜை மற்றும் பௌர்னமி அபிஷகம் மற்றும் பூஜைகள் நடை பெறும் வருடாந்திர உற்சவங்கள் மற்றும் பூஜைகள் 1.வைகாசி திருவிழா பௌர்னமி அபிஷகம் மற்றும் பூஜைகள், மற்றும் அருள்மிகு மாரியம்மன் திருவீதி உலா புறப்பாடு. 2.ஆடி மாத ஆடிப்பெருக்கு அபிஷகம் மற்றும் பூஜைகள், மற்றும் அருள்மிகு மாரியம்மன் திருவீதி உலா புறப்பாடு. 3.ஆடி மூன்றாவது வார வெள்ளி அபிஷகம் மற்றும் பூஜைகள், மற்றும் அருள்மிகு மாரியம்மன் திருவீதி உலா புறப்பாடு. 4.புரட்டாசி விஜய தசமி கொலு பூஜை மற்றும் அபிஷகம் மற்றும் பூஜைகள், மற்றும் அருள்மிகு மாரியம்மன் திருவீதி உலா புறப்பாடு. 5.ஐப்பசி தீபாவளி அன்று அபிஷகம் மற்றும் பூஜைகள், மற்றும் அருள்மிகு மாரியம்மன் திருவீதி உலா புறப்பாடு. 6.மார்கழி வைகுண்ட ஏகாதசி அன்று அபிஷகம் மற்றும் பூஜைகள், மற்றும் அருள்மிகு மாரியம்மன் திருவீதி உலா புறப்பாடு. 7.தை பொங்கல் சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷகம் மற்றும் பூஜைகள், மற்றும் அருள்மிகு மாரியம்மன் திருவீதி உலா புறப்பாடு. 8.பங்குனி யுகாதி பண்டிகை சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷகம் மற்றும் பூஜைகள், மற்றும் அருள்மிகு மாரியம்மன் திருவீதி உலா புறப்பாடு. 9.சித்தரை தமிழ்ப்புத்தாண்டு பண்டிகை சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷகம் மற்றும் பூஜைகள், மற்றும் அருள்மிகு மாரியம்மன் திருவீதி உலா புறப்பாடு. பிராத்தன்னை பூஜைகள் திருக்கோவிலில் ஆவணி 1 முதல் வைகாசி திருவிழா உற்சவத்திற்கு முன் வரை அம்மன் பூ வரம் கேட்டால் நினைத்த காரியம் மற்றும் தொழில் மற்றும் திருமண காரியங்கள் அம்மன் பூ கேட்டால் வரம் மேன்மை கிடைக்கிறது. திருக்கோவிலில் செவ்வாய் கிழமை ,வெள்ளி கிழமை தீபம் ஏற்றுதல் மூலம் நினைத்த காரியங்கள் மற்றும் சுபகாரியங்கள் குறிப்பிட்ட நாட்களில் மேன்மை கிடைக்கிறது. திருக்கோவிலில் அபிஷகம் மற்றும் அர்ச்சனை செய்வதன் மூலம் குடும்ப நன்மைகள் நடக்கும் மற்றும் உடல் நிலை மேம்படுகிறது. தல வரலாறு கோவை மாவட்டம், கோவை வடக்கு வட்டம், எண் 4 வீரபாண்டி என்னும் கிராமம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னாள் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தென் கொடியிலுள்ள இங்குவந்து குடி அமர்ந்தன.அவர்கள் தங்களுடன் தங்கள் நெடுங்காலமாக வழிபட்டுவந்த மாரியம்மையை இங்கே பிரதிஷ்டை செய்தனர். அம்பிகை தன்னை அண்டிவந்த பக்தர்களுக்கு அருள் வழங்க ஆரம்பித்தால் பக்தர் கூட்டமும் அலைமோதியது. புதியதாக மாரியம்மன் திருஉருவாச் சிலை செய்து நிறுவினார்.அம்பிகை தன் காலடியில் மகிஷாசூரன் என்பவனை வதைக்கும் தோற்றத்துடன் சிலை உள்ளது. திருக்கோவில் எண்கோணவடிவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூல விக்கிரக அம்பிகை வலதுகையில் உடுக்கையும்,இடது கையில் சூலமும்,இன்னொரு வலது கையில் கத்தியும் ,இடது கையில் கபாலமும் ,அழல்சிகை முடியுடன் விளங்குகிறாள். மாரியம்மையின் இயல்பு தொற்று நோய் தீர்த்தல் ,கண்ணோய் தீர்த்தல். இந்த சிறப்புமிகுந்த திருக்கோவிலுக்கு வருகை தந்து தெய்வங்களின் திருவருளை பெற்று இன்பமடையலாம்.
