கொங்கு நாட்டில் புகழ்பெற்ற வணிகர் சமுதாயம் 500ஆம் செட்டியார்கள் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன் இந்த கதை நடந்தாகக் கூறப்படுகிறது.500 ஆம் செட்டியார் சிலர் மிளகு ,இலவங்கம் கிராம்பு இவற்றை சேரநாட்டில் வாங்கி, அட்டபாடி ,குருந்தமலை ,பெள்ளாதி , சத்தியமங்கலம் வழியாக மைசூர் சென்று வணிகம் செய்தனர், அவ்வாறு ,ஒருதடவை பொதிமாடுகளில் மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்தபோது குருந்தமலை அடிவாரத்தில் தங்கி இருக்கிறார்கள் . அப்பொழுது ஒரு சிறுவன் அங்கு வந்து இவைகள் என்னமூட்டைகள் என்று கேட்க ,வணிகர்கள் தவிட்டு மூட்டைகள் என்று கூறினாராம் ,சிறுவனும் ,ஓ தவிட்டு மூட்டைகளா என்று கேட்டுவிட்டுச் சென்றுவிட்டானாம். மறுநாள் வணிகர்கள்.மூட்டைகளைப் பிரித்துப்பார்த்தபோது அவை தவிட்டு மூட்டைகளாக இருந்தன .செட்டியார்கள் வருந்தி இது குருந்தைக்குமரனின் விளையாட்டு...கொங்கு நாட்டில் புகழ்பெற்ற வணிகர் சமுதாயம் 500ஆம் செட்டியார்கள் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன் இந்த கதை நடந்தாகக் கூறப்படுகிறது.500 ஆம் செட்டியார் சிலர் மிளகு ,இலவங்கம் கிராம்பு இவற்றை சேரநாட்டில் வாங்கி, அட்டபாடி ,குருந்தமலை ,பெள்ளாதி , சத்தியமங்கலம் வழியாக மைசூர் சென்று வணிகம் செய்தனர், அவ்வாறு ,ஒருதடவை பொதிமாடுகளில் மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்தபோது குருந்தமலை அடிவாரத்தில் தங்கி இருக்கிறார்கள் . அப்பொழுது ஒரு சிறுவன் அங்கு வந்து இவைகள் என்னமூட்டைகள் என்று கேட்க ,வணிகர்கள் தவிட்டு மூட்டைகள் என்று கூறினாராம் ,சிறுவனும் ,ஓ தவிட்டு மூட்டைகளா என்று கேட்டுவிட்டுச் சென்றுவிட்டானாம். மறுநாள் வணிகர்கள்.மூட்டைகளைப் பிரித்துப்பார்த்தபோது அவை தவிட்டு மூட்டைகளாக இருந்தன .செட்டியார்கள் வருந்தி இது குருந்தைக்குமரனின் விளையாட்டு என்று உணர்ந்தனர்.
குருந்தமலை வந்து வணிகர்கள் வணங்கி வேண்டினர்.முருகன் மன்னித்து ,மீண்டும் அவற்றை மிளகு மூட்டைகளாக ஆகினான் ,செட்டியார்கள் குழுவின் தலைவராக இருந்த கங்காதரன் செட்டியார் குருந்தமலை முருகனுக்கே தம்மை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டார்.மலையில் திருக்கோயில் அர்த்தமண்டபம்,சிவாலயம் முதலிய திருப்பணிகள் செய்துள்ளார். தம்முடைய ஒரே மகனுக்கும் குழந்தை வேல் என்று பெயர் சூட்டினார். பின்னர்,திருக்கோயிலுக்கு மேற்கில் உள்ள குகையில் இறங்கி சமாதி அடைந்துவிட்டாராம்.
அவருக்குப்பின் அவரது குமாரர் குழந்தைவேல் தீபஸ்தம்பம் நிறுவினார் .தீபஸ்தம்பத்தை மலையில் எப்படிக்கொண்டுபோய் நிறுத்துவது என்று கவலைப்பட்டபோது மலைஜாதி இளைஞர் ஒருவர் வந்து எல்லோரும் எடுங்கள் என்று கூறி தீபஸ்தம்பபத்தை மலையின் மேல் கொண்டு சேர்த்து நிறுவினார் என்று கூறப்படுகிறது.முருகனே இவ்வாறு வந்து அருளினார் என்று நம்பப்படுகிறது.
குழந்தை முருகனின் அற்புதங்கள்
அண்மைக்காலத்தில் குருந்தமலை குழந்தைவேலாயுதம் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார், சிக்கரம்பாளையத்தில் விளங்கிய திரு சி, நஞ்சப்பா 1943ஆம் ஆண்டில் 52 நாள் கோயிலில் தங்கித் தவம்செய்தார். ஒருநாள் கனவில் ,முருகன் வெள்ளக்கிணர் ,முருகானந்தநிலையம் தவத்திரு முருகானந்தசுவாமிகள் உருவில் தோன்றி அட்சதையை போட்டு ,பிரணவத்தை உபதேசம் செய்தாரர்ம்.விழித்துப் பார்த்தபோது கையில் , அட்சதையை இருக்கக்கண்டார்.
இவரே முருகன் ,திருமேனிமீது ஒவ்வோர் ஆண்டும், மார்ச் மாதம் 21,22,23 ஆகிய தேதிகளில் மாலையில் சூரியஒளி முருகன் திருமேனிமீது தோய்வதைக்கண்டார். அன்று தொடங்கி ,இவ்வழிபாடு இன்றும் இவ்வாலயத்தில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது
1937 முதல் 1973 வரை அறங்காவலராக விளங்கிய திருவாளர் டி,ரங்கைய கவுடர் வாழ்வில் அந்த முருகன் நிகழ்த்திய அற்புதங்கள் அனந்தம்,அவற்றில் சில 1941 ல் கல்யாணமண்டபம் இடிந்து விட்டது. எப்படி கட்டுவது என்று கவலைப்பட்டர், அப்போது அவர்கள் ஊரைச்சேர்ந்த புங்கம்பாளையம் குப்பண்ண முதலியார் , நேற்று இரவு கனவில் ஒரு காவடிசாமியார் வந்தார் .நான் தானியம் போடும் படி மனைவியிடம் கூறினேன் .அதற்க்கு அந்தசாமியார் நான் தானியம் வாங்கவரவில்லை.பணம் வாங்க வந்தேன் என்று கூறினார்,ஆகவே கல்யாணமண்டபம் கட்ட என்பங்காக ரூ.200 தருகிறேன் என்றார் ,இவ்வாறு பலரும் கொடுக்க கல்யாணமண்டபத்திருப்பணி நிறைவேறியது.
இதுபோல 1946ஆம் ஆண்டில் இராஜகோபுரம் கட்டவிரும்பினார் பீளமேடு பி .எஸ்.ஜி கங்காநாயுடு அவர்களைப் போய் பார்த்தனர் .அவர் ,தாம் பழனிக்குத்தான் போவதன்றி வேறு எங்கும் போவதில்லை என்று கூறிவிட்டார்,பின்,அவரே ஒரு கிருத்திகை அன்று ,கோவிலுக்கு வந்தார் . அவரது கனவில் முருகன் தோன்றி ,நான் பழனியில் மற்றும் அன்றி இங்கும் இருக்கிறேன் என்றாராம். ஆகவே குருந்மலைக்கு வந்ததாகக்கூறினார். வழிபாடுசெய்து கீழே அடிவாரம் வந்தபோது ,அந்த இடத்தில் ஐந்து நிலை இராஜகோபுரம் தாமே கட்டித்தருவதாக ஒத்துக்கொண்டார் .சேலத்தில் இருந்து ஸ்தபதியை வரவழைத்து சிரவணபுரம் கௌமாரமடாலயம் ,அப்போதிருந்த தவத்திரு கந்தசாமிசுவாமிகளால் முகூர்த்தம் செய்யப்பெற்று , இராஜகோபுரம் நிறைவேறியது .இதேபோல கோயில் நிலம் திரும்பக்கிடைத்த அற்புதத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
குருந்தமலைக்கோயிலுக்கு அப்போது நிலம் இல்லை ,படித்தரத்திற்கு அரிசி வாங்கவும் சிரமப்பட்டனர். இவ்விபரத்தை சிரவணபுரம் , தவத்திரு கந்தசாமிசுவாமிகளிடம் பிரார்த்தித்தனர். அவர் குருந்தமலை முருகன் முன் தினமும் நெல் ,நெல் என்று பிரார்த்தனை செய்யும்படி கூறினார் . அவ்வாரே இறைவனிடம் வேண்டினார்.மூன்றுமாதம்
கழித்து ,அன்னுரில் இருந்து இராமசாமி கவுண்டர் என்பவர் ஒருதகவலையும் ,வில்லங்க சர்டிபிகேட் நகல் ஒன்றையும் கொண்டுவந்தார் .அதன்படி ,குன்னத்துர் கிராமம் ,கடத்துரில் குளத்துப்பாசனம் 2.85 ஏக்கர் பூமியை ஒருவர் விற்க முயற்சி செய்ததாகவும் , வில்லங்க சர்டிபிகேட் எடுத்ததில் ,குருந்தமலை ,குழந்தைவேலாயுதசுவாமி என்று இருந்ததாகவும் கூறினார். இதனால் பூமியை வாங்கநினைத்தவர் வாங்கவில்லை ,பின்னர் ,அந்த ஊர் போய் ,பூமியைப் பர்த்து பூமி சுவாதீனம் பெறப்பட்டு ,அந்தப்பூமியில் கிடைக்கும் நெல்லில் இருந்து படித்தரம் ஏற்பாடாகி உள்ளது. இவ்வாறாக மறைந்து போன பூமியை முருகன் மீண்டும் தனதாக்கிக் கொண்டான்.
பஞ்சாட்சர கணபதிகோயிலும் ,பஞ்சலிங்க கோயிலும் பழுதுபட்டிருப்பதால் யாரைக்கொண்டு திருப்பணிசெய்யலர்ம் என்று பேசிக்கொண்டிருந்தார் ,அப்போது மேட்டுப்பாளையத்தைச்சேர்ந்த குமாரசாமி ஆச்சாரி என்பவர் மனநிலை சரியில்லாமல் அவர் உடனே நான் 5000 ரூபாய் தருகிறேன் என்று கூறினார் .நிருவாகத்தினர் மனநிலை சரிஇல்லாதவர் ஏதோ கூறுகிறார் என்று விட்டுவிட்டனர் . ஆனால் அவரோ மறுநாள் 5000ரூபாய் கொண்டுவந்து கொடுத்து வேலை ஆட்களுடன் அவரும் வேலை செய்தார் ,திருப்பணி நிறைவேறிய போது அவர்மனநிலையும் சரியாகியது.
இதேபோல் இஸ்லாமிய அன்பர் ஒருவருக்குச் சந்ததியும் கொடுத்தர்ர்.இந்தமுருகன் .பில்லுர் அணைக்கட்டியில் ஒப்பந்தக்காரராக பணியாற்றிய இப்ராகீம் காசீம் என்பவர் கோயிலுக்கு வந்துள்ளார், இந்த கடவுள் எனக்குப்புத்திரபாக்கியம் தருவாரா,,,,, என்று கேட்டார்.அர்ச்சகர் பிரசாதமாக குழந்தைவேலனின் வேலில் செருகப்பட்டிருந்த எலுமிச்சம் பழத்தைக்கொடுத்து, வீட்டில் கொண்டுபோய் வைத்து வழிபடுமாறு கூறினார்,அவரும் அதேமாதிரி செய்தார். அடுத்த பத்தாம் மாதம் அவருக்கு ஒர் ஆண்மகவுப்பிறந்தது,மகிழ்ச்சிஅடைந்தஅவர் ஆறுமுக சுப்பிரமணியர் கோயிலிருந்து வடக்கும் ,கிழக்கும் உள்ள செங்கல் திருமிதிலைக்கட்டித்தந்தார் .
இதுமட்டும் அன்று ,கன்னார்பாளையம் என்ற ஊரைச்சேர்ந்த தாசப்ப கவுண்டர் சின்னாத்தாள் தம்பதியினருக்கு மூன்று பெண்குழந்தைகள் இருந்தன.ஆண்மகவு வேண்டினர் நான்காவதாக ஓர் ஆண் மகவு பிறந்தது. ஆனால் .அது மஞ்சள் நிறமாகஇருந்தது. அதை வளர்த்துவரும் நாளில் மீண்டும் ஆண் மகவு பிறந்தது.அதுவும் மங்சள் நிறமாக இருந்தது. குருந்தைக் குமரனிடம் போய் வேண்டினர்,அவரது,அருட்பிரசாதத்தைக் கொண்டுவந்து குழந்தைகள் மீது தடவி மஞ்சள்நிறம்மாறிக் குழந்தைகள் குணமடைந்தனர்.
இதுபோன்று விராலியூரைச் சேர்ந்த இராசரத்தினம் தம்பதியினர், சஷ்டி விரதம் இருந்து ஆண்மகவு பெற்றனர்,.இதுவன்றி அடிக்கடி, திருப்புகழ் பாடல்களையும் காலடி ஓசைகளையும் அடிக்கடி கேட்பதாக அன்பர்கள் உணர்கின்றனர். மிகப்பெரிய கருநாகம் ஒன்று இருப்பதாக அர்ச்சகர் தெரிவிக்கிறார், ஆக வேண்டுவோர்க்கு வேண்டுவனவழங்கும் அருட்தந்தையாய் ,குமரனாய் இந்தவேலன் விளங்குகிறான்.ஒருதடவை வருவோரை மீண்டும் மீண்டும் வர வழைக்கும் அற்புத்த்தெய்வம் இவன் என்பதைப் பல அதிசயச் செய்திகள் நிரூபிக்கின்றனர்,அவை இன்றும் பலரது வாழ்வில் நடைப்பெற்றுக்கொண்டு இருக்கின்றனர் என்பது கண்கூடு இதுவே குழந்தைக்குமரனின் அற்புத செயல்களாகும்.
தல பெருமை
. குருந்தமலை, இப்பகுதி 16 ஆம் நூற்றாண்டின் 24 நாடுகளில் ஒன்றான வடபரிசரநாடு என்று அழைக்கப்பட்டது. கொங்கு சோழர்கள் கி.பி 943 - கி.பி 1305, கொங்கு பாண்டியாக்கள் கி.பி 1253 - கி.பி 1304 மற்றும் விஜயநகரத்தின் கல்வெட்டுகள் அருகிலுள்ள பெல்லாதி கிராமங்களில் காணப்படுகின்றன, குரும்பபாளையம், வெல்லியங்காடு மற்றும் மருதுர் ஆகியவை இந்த பகுதி மேற்கண்ட வம்சங்களால் ஆளப்பட்டது என்பதற்கு சான்றாகும். கொங்குநாடு 3 ஆம் நூற்றாண்டில் இருந்து இரட்டாஸ், 6 ஆம் நூற்றாண்டிலிருந்து கங்கை மற்றும் பாண்டியாக்கள், சங்க காலத்திலிருந்து 9 ஆம் நூற்றாண்டு வரை சேரஸால் கொங்குவின் மேற்கு பகுதி, விஜயலாயா இன் மகன் ஆதித சோழர்.... குருந்தமலை, இப்பகுதி 16 ஆம் நூற்றாண்டின் 24 நாடுகளில் ஒன்றான வடபரிசரநாடு என்று அழைக்கப்பட்டது. கொங்கு சோழர்கள் கி.பி 943 - கி.பி 1305, கொங்கு பாண்டியாக்கள் கி.பி 1253 - கி.பி 1304 மற்றும் விஜயநகரத்தின் கல்வெட்டுகள் அருகிலுள்ள பெல்லாதி கிராமங்களில் காணப்படுகின்றன, குரும்பபாளையம், வெல்லியங்காடு மற்றும் மருதுர் ஆகியவை இந்த பகுதி மேற்கண்ட வம்சங்களால் ஆளப்பட்டது என்பதற்கு சான்றாகும். கொங்குநாடு 3 ஆம் நூற்றாண்டில் இருந்து இரட்டாஸ், 6 ஆம் நூற்றாண்டிலிருந்து கங்கை மற்றும் பாண்டியாக்கள், சங்க காலத்திலிருந்து 9 ஆம் நூற்றாண்டு வரை சேரஸால் கொங்குவின் மேற்கு பகுதி, விஜயலாயா இன் மகன் ஆதித சோழர் கி.பி 871-901, ஏகாதிபத்திய சோழர் கொங்குநாட்டை வென்றார், கி.பி 943 முதல் கி.பி 1305 வரை அவரது பிரதிநிதிகளால் கொங்குச்சோலஸ் ஆட்சி செய்தார். கொங்குச்சோலஸ் பலவீனமானபோது கொங்கு பாண்டியாக்கள் பொறுப்பேற்றனர். வீரவல்லல்லா, ஹொய்சாலா 1292 . முதல் 1343 . வரை, விஜயநகர, 1378 . இலிருந்து மதுரை சுல்தானை தோற்கடித்த பின்னர், மைசூர் சமஸ்தானத்தின் வீரநஞ்ச உதயார் சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி செய்தார், அதனைத் தொடர்ந்து ஹைதராலி கான் மற்றும் மைசூரின் திப்புசுல்தான் மற்றும் பிரிட்டிஷ்.