கோயில் வரலாறு தல பெருமை கொங்கு நாட்டில் புகழ்பெற்ற வணிகர் சமுதாயம் 500ஆம் செட்டியார்கள் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன் இந்த கதை நடந்தாகக் கூறப்படுகிறது.500 ஆம் செட்டியார் சிலர் மிளகு ,இலவங்கம் கிராம்பு இவற்றை சேரநாட்டில் வாங்கி, அட்டபாடி ,குருந்தமலை ,பெள்ளாதி , சத்தியமங்கலம் வழியாக மைசூர் சென்று வணிகம் செய்தனர், அவ்வாறு ,ஒருதடவை பொதிமாடுகளில் மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்தபோது குருந்தமலை அடிவாரத்தில் தங்கி இருக்கிறார்கள் . அப்பொழுது ஒரு சிறுவன் அங்கு வந்து இவைகள் என்னமூட்டைகள் என்று கேட்க ,வணிகர்கள் தவிட்டு மூட்டைகள் என்று கூறினாராம் ,சிறுவனும் ,ஓ தவிட்டு மூட்டைகளா என்று கேட்டுவிட்டுச் சென்றுவிட்டானாம். மறுநாள் வணிகர்கள்.மூட்டைகளைப் பிரித்துப்பார்த்தபோது அவை தவிட்டு...