கொங்குத் திருநாட்டின் கண்ணென விளங்கும் கோவைத் திருநகரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய தடாகத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான மலைத்தொடரில் மருத மழையின் வடபுறச் சாரலில் அழகுற அமைந்துள்ள மிகப் பழம்பெரும் திருக்கோயில் அருள்மிகு அனுவாவி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலாகும்.
தல வரலாறு
இராமாயணப் போரில் இராவணனது படைகளுக்கும் இராமபிரானுடைய படைகளுக்கும் கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும் நேரம் இராம பிரானின் தம்பி இலக்குவன் போரில் விழுப்புண்களை தங்கி மயங்கி விடுகின்றான். இலக்குவனின் உயிரை காப்பாற்ற சஞ்சீவி மலையில் உள்ள மூலிகைச் சாற்றினால் தான் முடியும் என்ற நிலையில் சஞ்சீவி மலையை கண்டுபிடித்து மூலிகையை தேடி கொண்டு வர உற்ற வீரன் அனுமன் தான் என முடிவு செய்து இராம பிரான்...கொங்குத் திருநாட்டின் கண்ணென விளங்கும் கோவைத் திருநகரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய தடாகத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான மலைத்தொடரில் மருத மழையின் வடபுறச் சாரலில் அழகுற அமைந்துள்ள மிகப் பழம்பெரும் திருக்கோயில் அருள்மிகு அனுவாவி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலாகும்.
தல வரலாறு
இராமாயணப் போரில் இராவணனது படைகளுக்கும் இராமபிரானுடைய படைகளுக்கும் கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும் நேரம் இராம பிரானின் தம்பி இலக்குவன் போரில் விழுப்புண்களை தங்கி மயங்கி விடுகின்றான். இலக்குவனின் உயிரை காப்பாற்ற சஞ்சீவி மலையில் உள்ள மூலிகைச் சாற்றினால் தான் முடியும் என்ற நிலையில் சஞ்சீவி மலையை கண்டுபிடித்து மூலிகையை தேடி கொண்டு வர உற்ற வீரன் அனுமன் தான் என முடிவு செய்து இராம பிரான் அனுமனை அனுப்பி உடன் மூலிகைகளை பறித்து வரப் பணிக்கிறார் இராம பிரான் இட்ட பணியினினை தட்டாமல் செய்ய்யும் அனுமன் தென் நாடு நோக்கி பறந்து சஞ்சீவி மலையினை கண்டுபிடிக்கிறார், மூலிகையின் பெயரும் தன்மையும் அனுமனுக்கு மறந்து விட, சஞ்சீவிமலையினை அடியோடு பெயர்த்து எடுத்து வடதிசை நோக்கி அனுமன் வேனில் பறந்து வந்து போது தற்போது அனுபவி சுப்பிரமணியர் எழுந்தருளியுள்ள மலைப்பகுதியின் வழியே வரும் போது தங்க முடியாத தாகம் ஏற்படுகிறது. மேற்கொண்டு செல்ல முடியாமல் முருகப்பெருமானை நினைத்து வேண்ட, அனுமனின் வேண்டுதலுக்கு இறங்கிய முருகப்பெருமானும் தான் திருக்கை வேலால் அவ்விடத்தில் மலையைக் குத்த அதிலிருந்து தீர்த்தம் மிகுதியாக வெளிப்பட அனுமனின் தாகம் தீர்த்து வள்ளி தெய்வானையுடன் கட்சி தந்த சுப்ரமணியரை வழிபட்டு தான் பயணத்தை ஹோடர்ந்து சென்றதாக தெரிகின்றது.இங்ஙனமாக, அனுமனின் தாகம் தீர்க்க தனது திருக்கை வேலால் ஊற்று ஏற்படுத்தி அருளியதால் அனு (அனுமன்) வாவி (ஊற்று) எனப் பெயர் பெற்று அனுவாவி சுப்ரமண்யராக வள்ளி தெய்வானை சமேதராக வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரமளிக்கின்றார்.மேற்கண்டவாறு முருகனின் அருட்கை வேலால் உற்றெடுத்த அனுமன் தீர்த்தம் வற்றாத சுனையாக இன்றளவும் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதும் ஊர்மக்களின் தாகம் தீர்க்கும் குடிநீராய் பயன்படுவது மிகச் சிறப்பானதொன்றாகும் மா மரம் இது திருத்தலத்தின் தல மரம். இவ்வாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் என முப்பெருமையும் ஒருங்கே பெற்ற திருத்தலமாகும்.