கொங்குத் திருநாட்டின் கண்ணென விளங்கும் கோவைத் திருநகரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய தடாகத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான மலைத்தொடரில் மருத மழையின் வடபுறச் சாரலில் அழகுற அமைந்துள்ள மிகப் பழம்பெரும் திருக்கோயில் அருள்மிகு அனுவாவி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலாகும். தல வரலாறு இராமாயணப் போரில் இராவணனது படைகளுக்கும் இராமபிரானுடைய படைகளுக்கும் கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும் நேரம் இராம பிரானின் தம்பி இலக்குவன் போரில் விழுப்புண்களை தங்கி மயங்கி விடுகின்றான். இலக்குவனின் உயிரை காப்பாற்ற சஞ்சீவி மலையில் உள்ள மூலிகைச் சாற்றினால் தான் முடியும் என்ற நிலையில் சஞ்சீவி மலையை கண்டுபிடித்து மூலிகையை தேடி கொண்டு வர உற்ற வீரன் அனுமன் தான் என முடிவு செய்து இராம பிரான்...