Screen Reader Access     A-AA+
அருள்மிகு குடலுருவி மாரியம்மன் திருக்கோயில், காட்டேரி தேவர் வீதி, சூலூர் - 641402, கோயம்புத்தூர் .
Arulmigu Kudaluruvi Mariamman Temple, Katteri Devar Veethy, Sulur - 641402, Coimbatore District [TM009827]
×
Temple History

தல வரலாறு

பெண்தான் உலகின் வளர்ச்சிக்கும், வாழ்க்கைக்கும் காரணமானவள். ஆகவே சக்தியை முழுமுதற் பொருளாக வழிபடும் நிலை காலத்திற்கு முந்தையது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் காலத்திற்கு எட்டாத காலத்திற்கு முன்னரே, கொற்றவை வழிபாடு சிறந்து விளங்கியது. சிறப்பாக கொங்கு நாடு சக்தி வழிபாட்டில் புகழ் பெற்றது. தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்தின் காவல் தெய்வ மாக விளங்குவது மாரியம்மனே. அந்த வகையில், இந்த ஊரின் காவல் தெய்வமாக விளங்குவது குடலுருவி மாரியம்மன் ஆவாள் சூலுர் வரலாற்றுப் புகழ் கொண்ட பேரூர். சூரலூர் என்பது இதன் பழம் பெயர். சூரல் என்பதற்கு, நாணற் புதர்கள் அதிகம் உள்ள இடம் என்று கூறலாம். சூரல் பம்மிய கான்யாறு என்பது சங்க இலக்கியத் தொடர். அந்த வகையில் பழம் பெருமை கொண்ட இவ்வூரில் தேசிய...