Screen Reader Access     A-AA+
அருள்மிகு அரவான் திருக்கோயில், Singanallur, கோயம்புத்தூர் தெற்கு - 641005, கோயம்புத்தூர் .
Arulmigu Aravan Temple, Singanallur, Coimbatore - 641005, Coimbatore District [TM009829]
×
Temple History

தல வரலாறு

மகாபாரதபோரில் துரியோதனன் அரவானை களபலியாக்க எண்ணி அவன் சம்மதத்தையும் பெற்றான்.இதனையறிந்த கிருஷ்ணர் அந்தணர் வேடம் கொண்டு அரவானை அணுகி அவனது தந்தையர்களான பாண்டவர்களுக்கு வெற்றி கிட்டும் வகையில் போரில் களபலியாக வேண்டினார்.அதனை அரவான் ஏற்று துரியோதனனுக்கு தான் மும்பு அறித்த வாக்கின் படி, போரின் முதல்நாளே தன்னை பலியாக்கிக்கொள்ள கோரினான்.பிறகு கிருஷ்ணர் மணமாகாத கன்னிமகனை பலியிடுவது கூடாது என்ற போர்நெறிக்கிணங்க பூலுவ குலத்தை சார்ந்த பொங்கியம்மாள் என்ற பெண்ணுக்கு எடையளவு பொன்கொடுத்துஅரவானுக்கு திருமணம் முடிந்ததும் அரவான் துரியோதனனுக்கு பலியாக ஒப்புக்கொண்ட அமாவாசை நாளை,ஒருநாள் முன்னதாக்கி அரவான் திருமணம் செய்த மறுநாள் வருமாறு செய்து பாண்டவர்களுக்காகவே பலியிட செய்தும் அவன் வேண்டியபடி தனது உயிர் போன பின்னர் 18 நாள் நடந்த பாரதபோரை கண்குளிர...

புராண பின்புலம்

அரவான் இந்து காப்பியமான மகாபாரதத்தில் தோன்றும் ஒரு சிறிய கதாபாத்திரம். இவர் இரவன், இராவத் மற்றும் இராவந்த் என்றும் அறியப்படுகிறார். அரவான் பாண்டவ இளவரசன் அருச்சுனன் மகாபாரதத்தின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவர் மற்றும் நாக இளவரசி உலுப்பி ஆகியோரின் மகன். அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாக உள்ளார். கூத்தாண்டவர் என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். திரௌபதி வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை. அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் இவர்கள் தென்னிந்தியாவில் அரவாணி என்றும், தெற்கு ஆசியா முழுவதும் ஹிஜிரா என்றும் அறியப்படுகின்றனர் சமூகத்தின் காவல்...