ஆனைமலை வட்டம் வேட்டைக்காரன் புதூர் கிராமத்தில் சேத்துமடை என்ற இடத்தில் அருள்மிகு தெய்வகுளம் காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயிலின் பரம்பரை அரங்காவலரின் முன்னோர்கள் தற்போது ஆனைமலை வட்டம் ரெட்டியாரூர் கிராமத்திலிருந்து தனது இரு மகன்களான பழனி கவுண்டர் மற்றும் திருமூர்த்தி கவுண்டர் ஆகிய இருசிறுவர்களை அழைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துவதற்காக வேட்டைக்காரன் புதூரை நோக்கி தலையில் ஒரு உணவு கூடையுடன் வந்துள்ளார் வரும் வழியில் கூடை வழக்கத்திற்கு மாறாக கனமாக இருந்துள்ளது என்னவென்று பார்க்கும் பொழுது அந்தக் கூடையில் ஒரு கல் இருந்தது எப்படி வந்தது என்று தெரியவில்லையே எனக் கூறிக்கொண்டு அந்தக் கல்லை தூக்கி தூர எறிந்து விட்டு வந்தார் திரும்பவும் சிறிது தூரம் தாண்டியதும் கூடை கனமாகிவிட்டது...ஆனைமலை வட்டம் வேட்டைக்காரன் புதூர் கிராமத்தில் சேத்துமடை என்ற இடத்தில் அருள்மிகு தெய்வகுளம் காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயிலின் பரம்பரை அரங்காவலரின் முன்னோர்கள் தற்போது ஆனைமலை வட்டம் ரெட்டியாரூர் கிராமத்திலிருந்து தனது இரு மகன்களான பழனி கவுண்டர் மற்றும் திருமூர்த்தி கவுண்டர் ஆகிய இருசிறுவர்களை அழைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துவதற்காக வேட்டைக்காரன் புதூரை நோக்கி தலையில் ஒரு உணவு கூடையுடன் வந்துள்ளார் வரும் வழியில் கூடை வழக்கத்திற்கு மாறாக கனமாக இருந்துள்ளது என்னவென்று பார்க்கும் பொழுது அந்தக் கூடையில் ஒரு கல் இருந்தது எப்படி வந்தது என்று தெரியவில்லையே எனக் கூறிக்கொண்டு அந்தக் கல்லை தூக்கி தூர எறிந்து விட்டு வந்தார் திரும்பவும் சிறிது தூரம் தாண்டியதும் கூடை கனமாகிவிட்டது மீண்டும் கூடையை இறக்கிப் பார்த்தபோது அதனுள் தூக்கி வீசப்பட்ட கல் இருந்தது மீண்டும் அந்தக் கல்லை தூக்கி எறிந்து விட்டு தனது பயணத்தை தொடர்ந்தார் இவ்வாறு அந்த கல் மீண்டும் மீண்டும் கூடைக்கு வருவதும் தூக்கி வீசுவதுமாகவே அவருடைய பயணம் அமைந்தது தற்சமயம் அமைந்துள்ள பகுதிக்கு வந்தபோது மீண்டும் அந்தக் கல் சாப்பாட்டுக்கூடையில் இருந்துள்ளது. அந்தக் கல்லை எடுத்து அங்கே வைத்து வழிபட தொடங்கினார் அந்த இடம் இப்பொழுது தெய்வகுளம் காளியம்மன் கோயில் அமைந்துள்ள இடமாகும்