தெய்வகுளம் காளியம்மன் சன்னதியும், கன்னிமார், விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது, இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தமிழ்புத்தாண்டு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி விழா திருவிழாவாக நடைபெறுகிறது.