இத்திருக்கோயில் பொன்னிவாடி கிராமத்தில் உள்ள கொசவலசு என்னும் இடத்தில் அமையப்பெற்ற சித்தர் கோயிலாகும். சைவம் மற்றும் வைணவம் ஒற்றுமைக்காக திருமலைசாமி என்ற சித்தர் ஒரு லிங்கத்தை வைத்து, திருநாமத்தை இட்டு வழிப்பட்டும், துளசி தீர்த்தம், திருமண்ணும் அங்கு வரும் மக்களுக்கு பிரசாதமாக வழங்கியும், மேற்படி இடத்தில் தங்கி பற்பல அதிசயங்களை நிகழ்த்தியும் மக்களின் நோய்நொடிகளை நிவர்த்தி செய்தும், பில்லி, சூனிய, ஏவல்களை விலக்கியும் மக்களுக்கு அருளாசி புரிந்து வந்த நிலையில் அவர் சயனித்த கட்டில் இன்றளவிலும் பூஜை செய்து வரப்படுகிறது. இத்திருக்கோயிலில் பகவான் திருமலைச்சாமி அருளியவாறு ஆண்டுதோறும் யுகாதி திருவிழாவின் போது கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து திருமலை லிங்கத்திற்கு தீர்த்தம் செலுத்துவதும், 10 நாட்கள் காவடிகள், சேவார்த்திகள் வந்து தங்கி...