இத்திருக்கோயில் மூலவர் அருள்மிகு முத்தாலம்மன். பக்தர்களுக்கு வேண்டியன அறிந்து வேண்டியவை தந்து அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதிக்கு வடகிழக்கு திசையில் நவகிரகங்கள் சன்னதியும், தென்மேற்கு திசையில் கிழக்கு திசை நோக்கி விநாயகரும், அர்த்தமண்டபத்தின் வெளிப்பிரகாத்தில் மூலவர் சன்னதி எதிர்புறம் மூலவரை நோக்கி சிம்மம் அமையப்பெற்றுள்ளது.