சென்னையைஅடுத்துள்ளதுபாடிஎன்னும்திருவலிதாயம்.இவ்வூரில்அருள்மிகுதிருவல்லீஸ்வரர்திருக்கோயில்அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்குத் சென்னையின்பல்வேறுபகுதிகளில்இருந்துபேருந்துவசதிகள்உள்ளது.கொரட்டூர்இரயில்நிலையத்திலிருந்துசுமார் 2கி.மீ.தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. சிவனருளும், குருவருளும், திருவருளும் பொழியும் திருவலிதாயத் திருக்கோயில், சென்னையில் உள்ள தொண்டை நாட்டு தேவாரபாடல் பெற்ற திருத்தலங்கள் முப்பத்திரண்டில் இருபத்தியொன்றாம் திருத்தலமாகத்திகழ்கிறது. சுமார் 1300 ஆண்டுகள் பழமையானதலம். சென்னையைச் சுற்றியுள்ள திருமயிலை, திருவான்மியூர், திருவேற்காடு, திருவிற்கோலம், இலம்பயங்கோட்டூர், திருவுறல்,தக்கோலம், திருவாலங்காடு, திருவெண்பாக்கம், திருப்பாசூர், திருமுல்லைவாயில், திருவொற்றியூர், ஆகிய திருத்தலங்கள் பூமாலை போல் அமையப் பெற்ற பதினொன்று திருதலங்களின் நடுவேமையமாக அமைந்துள்ளது இத்திருத்தலம்.