ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், தங்கமேடு,அருள்மிகு தம்பிக்கலைஐயன்சுவாமி திருக்கோயில் . இத்திருக்கோயில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலாகும். இத்தலத்தில் தம்பிக்கலைஐயன்சுவாமி சித்தராக காட்சி கொடுக்கிறார். இத்தலத்திருக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கொடிய விஷம் தீண்டுதல் மற்றும் உடலில் உள்ள விஷகடி மற்றும் அரிப்பு நோய்களை குணமாக்கும் வல்லமை கொண்ட திருத்தலமலாகும். மேலும் திருக்கோயிலில் இராகு கேது மிக முக்கியமானதாக விளங்குகிறது. இத்தலத்தில் குழந்தை இல்லாதவர் மற்றும் திருமணம் ஆகாதவருக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயில் பக்தர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வண்ணமாக திருக்கோயில் விளங்குகிறது.