ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், புதுசூரிபாளையம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆண்டவ குல அய்யன் திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலானது மருதகுல நாடார் இன மக்களின் ஆண்டவள் குலத்தின் வழியாக வந்த மக்கள் இதை குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். தற்போது ஏறத்தாழ 700 குடும்பங்களாக ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. சுமார் 35 வருடங்களுக்கு முன் தமிழ்ச் சங்கம் மற்றும் கூடல் நகர் என அழைக்கப்பெற்ற மதுரை மாநகரில் இருந்து புலம்பெயர்ந்து வந்ததாக செவி வழிச் செய்தி கூறுகிறது. ஆண்டவள் எனும் பெண் காணாமல் போன தன் உடன் பிறந்த சகோதரரை தேடி கண்டுபிடிக்க மதுரை மாநகரில் இருந்து ஒவ்வொரு ஊராக சுற்றி வருகிறார்கள். அப்பெண்மணி தன் குலத் தொழிலான கருப்பட்டி பொருளை விற்பனை செய்து கொண்டு வருகிறார்....