அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயில் சத்தியமங்கலம் நகர் மற்றும் வட்டம், ஈரோடு மாவட்டம். பாரதத்தில் கொங்கு நாடு பாருக்குள்ளே நல்ல நாடு நம்பாரத நாடு என பாரதியார் பாரதநாட்டை (இந்திய நாட்டை) புகழ்கிறார். பாரதநாடு பழம் பெருமை மிக்க நாடு, ஆன்மீக நெறியில் உயர்ந்த நாடு. 108 விஷ்ணு ஆலயங்களையும் 1008 சிவாலயங்களையும் தன்னகத்தே கொண்டது. பல அந்நிய நாட்டு மக்கள் நமது நாட்டின் மீது படையெடுத்து நமது அரும் பெரும் செல்வங்களைக் கொள்ளை கொண்ட போழ்தினும், வளமும், செல்வமும் பெருகிக் கொண்டே வரும் நாடு. அதற்குக் காரணம் பாரதமக்கள்...