தன்னை வேண்டுவோருக்கு வேண்டுவன ஈயும் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இதனைச் சுற்றியுள்ள ஏழு ஊர் மக்களால் மிகுந்த எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் ஏறத்தாழ 500 ஆண்டுகள் தொன்மைச் சிறப்புடையது. இவ்வம்மன் கிழக்கு முகமாக அமர்ந்த திருக்கோலத்தில் மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.