கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பக்கால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்த தெய்வம் மாரி (மழை)அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த தெய்வம் மேற்கு திசை நோக்கி அமைந்து உள்ளது, ஆதலால் இக்கோவில் மேற்கு தெரு மாரியம்மன் என அழைக்கப்பெறுகிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாகிறது. ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் மற்றும் மாசி மாதத்திலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.