வெள்ளோட்டில் கனகபுரம் கரையைச் சார்ந்த சாத்தந்தை குல காலிங்கராயக் கவுண்டர் அவர்கள் காலிங்கராயன் வாய்க்கால் வெட்டிவரும் சமயம் அணை உடைப்புக் கண்டு அதை அடைக்க இயலாது வருந்திய போது ஸ்ரீ பாலமடை அம்மன் கனவில் தோன்றி அருள்பாலிக்க மேற்படி அன்னையை அழைத்து வரும் சமயம் அசரீரி உண்டாகி இவ்விடத்தில் தங்கியிருந்து அருள் பாலிப்பதாக பாலமடை அம்மனாக நிறுவிய வரலாற்று உண்டு.