ஈரோடு மாவட்டம் ஈரோடு நகர் மற்றும் வட்டத்தில் அமைந்துள்ள வடகரையில் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் காவேரி ஆற்றங்கரையில் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில் ஈரோடு சேலம் சாலையில் ஈரோட்டிலிருந்து 2கி.மீ.தொலைவில் உள்ளது. அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் மூன்றுநிலை இராஜகோபுரத்துடன் கிழக்குநோக்கி அமைந்துள்ளது.அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் கருவறை அர்த்தமண்டபம் முன்மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. கிழக்குநோக்கி அமைந்துள்ள கருவறையின் நடுவே இலிங்க உருவமாய் அருள்மிகு சோழீஸ்வரர் அருள்பாலிக்கின்றார். கருவறையின் புறச்சுவர் அதிட்டானம் முதல் சிகரம் வரை செங்கல் மற்றும் சிமெண்ட் கொண்டு ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்ட மாடங்களில் தெற்கில் நர்த்தவிநாயகர் தட்சிணாமூர்த்தி மேற்கில்...
06:00 AM IST - 12:30 PM IST | |
04:00 PM IST - 08:30 PM IST | |
12:30 PM IST - 08:30 PM IST | |
காலை ஆறு மணி முதல் பிற்பகல் பன்னிரண்டு முப்பது மணி வரை மற்றும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு முப்பது மணிவரை தரிசன நேரம். விசேஷ தினங்களில் காலை ஐந்து மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மற்றும் மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை தரிசன நேரம் |