தல புராணம் கோதண்டராமர் திருக்கோயில் அமைவிடம் : வேலூர் மாநகரின் கிழக்கில், வேலூர், ஆற்காடு, சாலையில் வேலூர் நகரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் இரங்காபுரம் எனும் சிற்றூரில் பாலாற்றின் தென்கரையில் எம்பெருமான் எழுந்தருளி திருக்கோயில் கொண்டுள்ளார். தோற்றம் : இத்திருக்கோயில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த புராதானமான திருக்கோயில் ஆகும். சன்னதிகள் அமைப்பு : மூலவர் சன்னதி : முழுமைபெற்ற அவதார புருஷராக எம்பெருமான் தசரதருக்கு குலமகனாக வந்து அவதரித்து, ஆதர்சன புருஷராக வாழ்ந்து நம்மை நெறிப்படுத்தியவரும், மகனாய், தமயனாய், கணவனாய், மாணவனாய், நண்பனாய், அரசனாய் இருந்து இவ்வுலகுக்கு ஒழுக்க நெறி காட்டிய உத்தமர் வள்ளல் அருள்மிகு ஸ்ரீ ராமபிரான் மூலவராகவும் உடன் அருள்மிகு சீதை, அருள்மிகு இலட்சுமணரும் மூலவராக இருந்து...