ஆரம்பத்தில் கொங்கு சோழர் காலத்தில் அதாவது கி.பி.12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் வீரசோழசதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்ட இவ்வூர் கி.பி. 14 ஆம் நூற்றாணடில் போசாள மன்னர்கள் காலத்தில் வீரசோழ பிரம்ம தேயமான கற்றாயன் காணியாள வீரசோழ கதுர்வேதி மங்கலம் என வழங்கப்பட்டது. பின்னர், கி.பி 15 ஆம் நூற்றாண்டில் கற்றாயன் காணி என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் தற்போது கத்தாங்கண்ணி என அழைக்கப்பட்டது என்று கல்வெட்டில் உள்ளது மற்றும் இந்த ஆலயம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகும்.