இக்கோயில் 12 ஆ ம் நூற்றாண்டில் குறுப்பு நாடாக இப்பகுதி இருந்த போது, சோழன் காலத்தில், கோயில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அருள்மிகு நல்மணீஸ்வரர் திருக்கோயில் கி.பி.13-14 ஆம் நூற்றாண்டில் முழுமையாக கட்டப்பட்டது. இத்திருக்கோயில் கருவறையின் நடுவே சதுரவடிவ ஆவுடையார் மீது சுயம்பு இலிங்கம் காணப்படுகிறது. இந்த ஊரில் பெயர் வீர சோழ சதுவேதி மங்கலம் என்ற பெயரும் இருந்துள்ளது. தொடர்ந்து, இக்கோயிலுக்கு விக்கிரம சோழன், உத்தசோழன், ஒசில அரசன் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வீர வள்ளான் ஆகியோர் திருப்பணி செய்துள்ளனர்.