வேலூர் மாவட்டம், வட்டம் (ம) நகர், பேரிபேட்டையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் அம்பாள் பாதத்தில் ஸ்ரீசக்கரம் கருங்கல்லில் அமைக்கப்பட்டது ஒரு சிறப்பாகும். மிகவும் சாந்தமாய் உள்ள அம்பாளும், ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி ரூபமாகவும் அருள்பாலித்து வருகின்றாள். நெய்தீபம் ஏற்றி அம்பாளிடம் வழிபாடு செய்பவர்களுக்கு கைமேல் பலனை வழங்கும் வள்ளலாய் வேலூர் மாநகரில் பிரசித்தி பெற்றூ விளங்குகின்றாள்.