.இத்திருக்கோயில் சென்னையில் பிரதான கேந்திரமான சென்னை-79, சௌகார்பேட்டை பகுதியில் ஜெனரல் முத்தையா தெரு, எண்-1ல் அமையப்பெற்ற பழமையும் பெருமையும் வாய்ந்த ஒர் வைணவத் திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலானது சர்வே எண்,8638-ல் 37740 சதுர அடி கொண்ட பெரும் நில பரப்பில் பல சன்னதிகள் மற்றும் வராக புஷ்கரணி எனும் திருக்குளத்தைக் கொண்டு அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் தென்பகுதியில் பைராகிமடமும், வடபகுதியில் திருக்குளமும் அமையப்பெற்றுள்ளது, திருக்குளத்தை ஒட்டி சிவன், அனுமான் சன்னதி அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்குட்பட்டது. திருக்கோயிலின் நேரடி நிர்வாகம் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் ஓ.பி.413/56 மற்றும் ஏ.எஸ். 224/60-ன் கீழ் வகுக்கப்பட்ட நிர்வாகத்திட்டத்தின்படி நடைபெற்று வருகிறது. இதன்படி பைராகிமடத்தின் மகந்த் அலுவலர் ரீதியான ஒர் அறங்காவலராக பரம்பரை வழி...