இத்திருக்கோயில் 14-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இரத்தினகிரி என்றழைக்கப்படும் இடத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ளது. அம்மலையினைச் சுற்றி வயல் வெளிகளாக இருந்தன. மலைமீது சுமார் 100 ச.அடி பரப்பளவில் அருள்மிகு பாலமுருகன் சன்னதி அமைந்து இருந்தது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இத்திருக்கோயில் இங்கு இருந்து வருகின்றது. இத்திருத்தலத்து தெய்வானை, வள்ளி சமேத பாலமுருகப்பெருமானை மக்கள் நாள்தோறும் வழிபட்டு வந்துள்ளனர். முருகன் அருளால் பாடும் திறன் பெற்ற அருணகிரிநாதர் இரத்தினகிரி பாலமுருகனையும் பாடியுள்ளார். அருணகிரிநாதர் 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். முருகப்பெருமான் தனக்கு மாபெரும் அழகிய கோயில் கட்டிக்கொள்ள விரும்பினார். தனது பக்தர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து கோயில் கட்டும் பணியில் ஈடுபடுத்த முருகன் முடிவு செய்தார். நாள்தோறும் தன்னை வணங்க வரும் கீழ்மின்னல் சச்சிதானந்தம் அவர்களை...