அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நுறு ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில் ஆகும். ஆரம்ப காலத்தில் சுவாமி ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர், அம்பாள் ஸ்ரீ பர்வதவர்த்தினி தாயார் அருள் பாலித்து வந்துள்ளார்கள். 1965-ம் ஆண்டு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி சன்னதி புதுப்பிக்கப்பட்டு கிழக்கு பகுதியில் இராஜகோபுரம் அமைக்கப்பட்டு திருக்குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது வள்ளி, தெய்வானை சமேத அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி பிரதான தெய்வமாக இப்பகுதி மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி பிரமோற்சவம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.