தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் 88 திருக்கோயில்களைக் கொண்ட ஒரு முதுநிலைத் திருக்கோயிலாகும். தஞ்சாவூர் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் கும்பகோணம் வட்டம், தாராசுரம் அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் ஆகியவை உலக பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், வடகுரங்காடு துறையில் அமையப்பெற்றுள்ள அருள்மிகு தயாநிதிஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருவிடைமருதூர் வட்டம், திருவிசைநல்லூரில் அமையப்பெற்றுள்ள அருள்மிகு சிவயோகநாத சுவாமி திருக்கோயில் ஆகியவை தேவார பதிக ஸ்தலமாக விளங்குகிறது. தஞ்சாவூர் கருந்திட்டைகுடியில் அமையப்பெற்றுள்ள அருள்மிகு வசிஸ்டேஷ்வரர் திருக்கோயில் வைப்புத் தலமாக விளங்குகிறது. 108 திவ்ய தேச திருக்கோயில்களில் மாமணிக் கோயிலாக விளங்கும் அருள்மிகு மேல சிங்கப் பெருமாள் திருக்கோயில், அருள்மிகு மணிகுன்றப் பெருமாள் திருக்கோயில். அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில் ஆகிய 3...