தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களுள் அருள்மிகு சிவேந்திரர் திருக்கோயிலும் ஒன்றாகும், அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் எனவும் அழைக்கப்படுகிறது, இத்திருக்கோயில் வளாகத்தில் தென்மேற்கு மூலையில் இராஜகோபால சுவாமி பெருள் கோயில் அமைந்துள்ளது, தஞ்சாவூர் நகர் வடக்கு வீதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது, பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மி தொலைவில் அமையப்பெற்றுள்ளது,