தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில் கீழவாசல் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலும் ஒன்றாகும். இது தஞ்சாவூர் நகர் கீழவாசல் கும்பகோணத்தான் தெருவில் அமைந்துள்ளது. இத்தேவஸ்தானத்துடன் இணைந்த அருள்மிகு வடபத்ர காளியம்மன் திருக்கோயில் அருகாமையில் உள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.