தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில், அருள்மிகு மணிகுன்றப் பெருமாள் திருக்கோயிலும் ஒன்றாகும். வைகானஸ ஆகமப்படி இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது, 108 திவ்ய தேச திருக்கோயில்களுள் இதுவும் ஒன்று. இத்திருக்கோயில் தஞ்சாவூர் கரந்தையை அடுத்து தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொகைவில் அமைந்துள்ளது.
| 06:30 AM IST - 12:30 PM IST | |
| 04:30 AM IST - 08:30 AM IST | |
| 12:30 PM IST - 04:30 AM IST | |
| காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை மதியம் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு திரும்ப நடை திறப்பு மாலை 6.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல் | |