ஆழ்வார்களால் போற்றிப் பாடியதும் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவதாக திகழ்வதும் தஞ்சை மாமணிக் கோயில்கள் ஆகும். தமருள்ளம் தஞ்சை, தடம் பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில் என்பது இத்தலம் பற்றியதான ஆழ்வார்களின் அமுத மொழி. தஞ்சை மாமணிக் கோயில் - ஶ்ரீ நீலமேகப் பெருமாள், ஶ்ரீ மணிகுன்ற பெருமாள் ஶ்ரீ வீரநரசிம்ம பெருமாள் திருவருள் பாலிக்கின்றனர். திருமங்கை ஆழ்வார் பெரிய திருமந்திரத்தினை பெருமுயற்சியுடன் திருமாலிடமிருந்து பெற்று பெரிய திருமந்திரத்தினை பெருமுயற்சியுடன் பெற்று பெரிய திருமொழி பாடும் போது முதன் முதலில் திருக்குடந்தையை போற்றி, இரண்டாம் நிலையில் “வலம்புலாஞ்சோலை மாமதிர் தஞ்சை மாமணித் கோயில்” என இத்தலத்தினை மஞ்சளாசாசனம் செய்துள்ளார். ஒரு சமயம் பராசர முனிவர் தவம் புரிய...