தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில், தஞ்சாவூர் அருள்மிகு வேளூர் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்தேவஸ்தானத்துடன் இணைந்த அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயிலை அடுத்து அமைந்துள்ளது. இத்திருக்கோயில் தஞ்சாவூர்-திருவையாறு சாலையில் வெண்ணாற்றங்கரையில் அமையப்பெற்றுள்ளது. வையானஸ ஆகமப்படி ஒரு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது, இத்திருக்கோயில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.