தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஆலத்தூர் கிராமத்தில் அருள்மிகு அருள்மிகு வீரனார்(ம)அய்யனார்அமைந்துள்ளது.கிராம மக்களுக்கு குல தெய்வமாக வழிபாட்டு தலமாக உள்ளது அய்யனார் திருக்கோயில் கிழக்கு நோக்கியும் வீரனார் திருக்கோயில் வடக்கு நோக்கியும் அமையப்பெற்றுள்ளது. கர்பகிரகத்தில் காருடய அய்யனார் பூரண புஷ்கல தெய்வங்கள் உள்ளனர்.இத்திருக்கோயில் அதிஷ்டானம் கால்பரஸ்தரம் விமானம் கலசம் என்ற அமைப்பில் உள்ளது.இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக காணப்படுகிறது.. பழமையை குறிக்கும் குறியீடுகள் ஏதும் இத்திருக்கோயிலில் இல்லை.