வன்மீகம் என்றால் புற்று என்பது பொருள், இறையுரு புற்றிலிருந்து வெளிப்பட்டமையால் இறைவன் பெயர் அருள் மிகு வன்மீகநாதர் என்று அழைக்கப்படுகிறது, இத்திருத்தலம் முன்பொரு காலத்தில் வனமாக இருந்தமையால் தீபாரண்யக்ஷேத்ரம் எனவும் பின்னர் தீபநகர் எனவும் அழைக்கப்பெற்றது .இத்திருக்கோயில் கி,பி, 10 முதல்12.ம் நுற்றாண்டிற்குட்பட்ட காலத்தில், சோழ மன்னர் ஒருவரால் அமையப்பெற்றிருக்கவேண்டும் என்று தொல்லியல் துறை முலம் அறிய வருகிறது, பிற்காலத்தில் 1674 முதல் 1884 வரை தஞ்சை மாநகரில் கோலோச்சிய மராட்டிய பேரரசின் மன்னரான வெங்காஜி என்கிற ஏகோஜி மகாராஜாவின் அரசமாதேவி தீபாம்பாயி காலத்தில் கி.பி.1676-1684 முழுமையான திருப்பணிகள் செய்விக்கப்பெற்றதனால் தீபாம்பாள்புரம் என்று அழைக்கப்படுகிறது.