இத்திருக்கோயிலின் அருள்மிகு உஜ்ஜைனி காளி என்னும் ஐம்பொன்னாலாகிய உற்சவ விக்கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது, விக்கிரமாதித்த மன்னன் வழி பட்ட உஜ்ஜைனி காளி சிலை இங்கு எடுத்து வரப்பட்டதாக காவிரி நதி தீரத்தில் கிடைத்து .இத்திருக்கோயில் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளதாக காது வழிச் செய்தியாக உள்ளது. .இத்திருக்கோயில் நினைக்க முக்தி தரும் அண்ணாமலையாகவே கருதப்பட்டு பௌர்ணமி தோறும் திருக்கோயில் கிரிவலம் வந்து சேவார்த்திகள் வழி பட்டு வருகிறார்கள்