அமிர்தம் பாற்கடலில் கடையும் போது ராட்சசர்களால் துன்பமப்படும்போது ப்ரம்மா சிவபெருமான் அஞ்சும்படி தன் ஸ்ரீபிரோயக சக்கரத்தால் அசுரர்களை வதம் செய்தார். ஸ்ரீ லட்சுமி, சிவபெருமான், ஸ்ரீ ஜனார்தனுருமான ஸ்ரீ மஹாவிஷ்ணுமானவரை துளசி, தாமரை மலர்களால் பூஜித்தார்கள். ஆலகால விஷத்தால் சூழப்பட்ட இருள் நீக்கினார் ஸ்ரீ அபயவரதர். ஸ்ரீலக்ஷ்மி தடாகத்தில் கருடன், முனிவர்கள் தீர்த்தமாடி ஸ்னானம் ஸ்ரீ மஹாவிஷ்ணவை ஆராதித்தார்கள். ஸ்ரீலக்ஷ்மி தீர்த்தத்தில் தீர்த்தமாடினால் சகலபாபமும் , அபாயவரதராஜபெருமாளை சேவித்தால் சகல சௌபாகியங்களும் கிடைக்க பெறுவார்கள் என்பது திண்ணம். திருப்பதி பெருமானுக்கு பிரார்த்தனை நிறைவேற்ற முடியாதவர்கள் இக்கோயிலில் பிரார்த்தனை செய்தால் பிள்ளைப்பேறு, லட்சுமி கடாச்சம், பணக்கஷ்டம், தீராத வியாதிகள் தீரும், சர்வ மங்களமமும் உண்டாகும். ஸ்ரீ லட்சுமி கோவிலில் சூரியன் சந்திரன்...