ராயபுரம் என்கிற சிற்றூர் கும்பகோணம் மன்னார்குடி மார்க்கத்தில் நீடாமங்கலத்திற்கும் மன்னார்குடிக்கும் இடையில் ராஜப்பையஞ்சாவடி என்ற இடத்திற்கு மேற்கில் பாம்பணி சிவபெருமானின் ஜடா முடியில் அணிந்து கொண்டிருக்கும் பாம்பு போன்றது என்று தேவார திருமுறையில் போற்றப்படும் பாமணி ஆற்றிற்கு மேற்கில் அமைய பெற்றுள்ளது. வடமொழியில் ராய என்றால் செல்வம். பண்டைய காலத்தில் பசுசெல்வம் தான் சிறந்த கருதப்பட்டதால் ராயபுரம் செல்வம் நிறைந்த ஊர் என்ற பெயர் பெற்றிருக்கக்கூடும். பசுக்கள் நிறைந்த இடமாக இருந்ததால் தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் இங்கு குழல் ஊதும் கண்ணன் பிற்காலத்தில் கோயில் கொண்டான். இப்போது இருக்கும் கோயிலுக்கு மேற்கில் முன்பு ஸ்ரீ வரதராஜஸ்வாமி கோயிலும், அதன் இருமருங்கிலும் சில குடியிருப்புகளும் இருந்ததற்கான சான்றுகள் தென்படுகின்றன.பராமரிக்க யாருமில்லாததால் ஒரு...