இத்திருக்கோயிலின் பெயர் அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன், மூலவர் ஆவர். இத்திருக்கோயில் ஆம்பூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது . பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு அம்மனை தரிசிப்பர் . ஆடி , நவராத்திரி , மாசி மாத கிரகம் , புத்தாண்டு போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன . இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் இருபக்கமும் உள்ளது. மூன்று நிலைகளும் ஐந்து கலசங்களையும் கொண்டது . இத்திருக்கோயிலில் திருமண பிரார்த்தனை விழாவும் செய்யப்படுகிறது . திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்கள் அம்மனை மனதார பிரார்த்தித்து வழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும் என்பது பல வருட நம்பிக்கையாக உள்ளது ஆகமம் விதிகளின் படி பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது