திருத்துறைப்பூண்டி நகரில் மிகவும் பிரபலமான மாரியம்மன் திருக்கோயில் இதுவாகும். இங்கு பங்குனி மாதம் நடைபெறும் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்துகிறார்கள். பிரதி வாரம் வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். பெண் பக்தர்கள் அதிக அளவில் நேர்த்திக்கடன் நிறைவேற்றும் தளமாக இந்த திருக்கோயில் திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ளது