அருள்மிகு கூணான்டார்சுவாமி திருக்கோயில், மணக்கரை கிராமத்தில் கிழக்கு நோக்கி மூன்று நிலை இராஜகோபுரத்துடன் ஐந்து கலசங்களை கொண்டு அமைந்துள்ளது. கருவறையில் அருள்மிகு கூணான்டார்சுவாமி கிழக்கு நோக்கியும், தனி சன்னதியில் அருள்மிகு சோமகுலநாயகி தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளார்கள். இத் திருக்கோயிலில் ஒரு பிரகாரம் உள்ளது. பிரகாரத்தின் மேற்கு பகுதியில் விநாயகர் மற்றும் சுப்ரமண்யர் தனி சன்னதியாக உள்ளது. 3ம் இராஜராஜசோழன் காலத்தில், இத் திருக்கோயிலுக்கு வழங்கிய கொடைகள் குறித்த கல்வெட்டு ஒன்று அர்த்த மண்டபத்தின் வடபுற குமுதத்தில் உள்ளது.