அருள்மிகு மதுசுந்தரேஸ்வரர் திருக்கோயில் கோயில்பத்து கிராமத்தில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலில் அருள்மிகு மதுசுந்தரேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அருள்மிகு அமிர்த கலச நாயகி அம்மன்தெற்கு நோக்கியும் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். சுவாமி சன்னதி எதிர்புறம் சிறிய கருங்கல் மண்டபத்தில் நந்தியெம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.இத் திருக்கோயிலில் ஒரு சிறிய பிரகாரம் உள்ளது. பிரகாரத்தில் தல விருட்சமான வில்வ மரம் உள்ளது