அருள்மிகு சாந்தநாயகி சமேத பார்வதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் இஞ்சிகுடி கிராமத்தில் அமைந்துள்ளது , இத்திருக்கோயில் நஞ்சை நிலங்கள் சூழ தென்னை வாழை மா ஆகிய மரங்கள் நிறைந்த நீர்வளம் நில வளம் மிகுந்த இத்திருக்கோயிலில் அருணகிரிநாதர் மற்றும் இரட்டை புலவர் ஆகியோர் பாடி உள்ளனர், இத்திரக்கோயிலக்கு அருகில் கூத்தனுர் மகா சரஸ்வதி அம்மன் திருக்கோயில் மற்றும் திருமீயச்சூர் அருள்மிகு லலிதாம்பிகை அம்மன் திருக்கோயிலும் உள்ளது. இத்திருக்கோயிலில் மகா சிவராத்திரி மற்றும் வைகாசி விசாகம் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.