இத்திருக்கோயில் கோட்செங்க சோழனால் கட்டப்பெற்ற மாடக்கோயிலாகும், மேலும் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இத்திருக்கோயில் 157வது தேவாரத்தலமாகவும், திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 94வது தலமாகும். இத்திருக்கோயிலின் சிறப்புகள் திருப்பாற்கடலில் கிடைத்த அமிர்தம் தேவர் உலகில் ஒரு குடத்தில் வைத்து காப்பாற்றப்பட்டது. ஆனால் சர்வலோக நாயகனாகிய சிவபெருமான் கைலாச உருவமான ஒரு குடத்தில் தன் உருவமான அமிர்தத்தை நிறைத்துவைத்தார். உலக அழிவினால் உயிர்கள் தவித்த பொழுது அவ்வுயிர்களை உலகில் வாழச்செய்ய எண்ணி இருந்தார். படைப்புத் தொழிலைத் தொடங்கும் பொழுது குடம் மூன்றாக உடைந்தது. முதல் பாகம் ஆகிய அடிப்பாகம் காவிரியின் தென்கரையில் விழுந்தது. அந்த இடத்தில் இறைவன் அருஉருவத் திருமேனியாகிய இலிங்க வடிவம் கொண்டு ஆதி கும்பேஸ்வரர் என்ற...
| 06:00 AM IST - 12:00 PM IST | |
| 04:00 PM IST - 09:00 PM IST | |
| 12:00 PM IST - 04:00 PM IST | |
| 09:15 PM IST - 05:00 AM IST | |
| தினமும் காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 9.00 மணிக்கு கால சந்தி பூஜா செய்து 12.00 மணிக்கு உச்சிக்கால பூஜா முடிந்து நடை சாத்தப்படும் மீண்டும் மாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.00 மணிக்கு சயராக்ஷ பூஜா செய்யப்பட்டு 9.00 மணிக்கு அர்த்தஜாம பூஜா செய்து நடைமூடப்படும் | |