அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரசுவாமி திருக்கோயில் தேவார பாடல் பெற்ற 274 ஸ்தலங்களில் காவிரிக்குத் தென்கரையில் 105வது தலமாகத் திருக்களர் கோயில் அமைந்துள்ளது. களரி என்பது கூத்து என்னும் பொருளை குறிக்கும் தூர்வாச முனிவருக்கு நடராஜப் பெருமான் பிம தாண்டவ தெரிசனம் பொடுத்த தலமாதலால் திருக்களர் என்னும் பெயர் அமைந்துள்ளது. தாண்டவ தலங்கள் 8 அதில் முதல் ஸ்தலம் சிதம்பரம் இரண்டாவது ஸ்தலமாக திருக்களர் அமைந்திருக்கிறது. இத்தலம் திருவாருர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்காவில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மீ தூரத்திலும் திருத்துறைப்பூண்டியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. ...