அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் 1761ம் ஆண்டு துகோஜியின் புதல்வரான தஞ்சையை ஆண்ட பிரதாப சிம்ம மகாராஜாவால் கட்டப்பெற்றது. திருக்கோயில் வடக்கு நோக்கி உள்ளது. கிழக்கு வாயிலுக்கு கோபுரமில்லை. தெற்கு வாயிலில் மூன்று கண்களையுடைய கோபுரமுள்ளது. திருக்கோவிலின் சுற்றளவு கீழமேலடி 231, தென்வடலடி 162.திருக்கோவிலின் பெருமாளுக்கு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் என்ற பெயரும், அம்மனுக்கு ஸ்ரீ காசிவிசாலாட்சி என்ற பெயரும் வழங்குகின்றன. விசாலான பார்வையை உடையவள் என்பது பொருள். கோவிலுக்கு பக்கத்தில் ஓடும் விண்ணாறு தீர்த்தமாக உள்ளது. கோவிலுக்குள் ஓர் கிணறும் உள்ளது. விண்ணாற்றில் நீராடி ஸ்ரீ விஸ்வநாதரை வழிபடுவோர் வேண்டும் சித்திகளை பெறுவர்.