தேவர்கள் பிரகஸ்பதியை அவமதித்ததால் ஏற்பட்ட கஷ்டங்களை நாதருடைய ஆணையின்படி இத்தலத்தில் வந்து வேத தீர்த்தத்தில் நீராடி வேதமந்திரங்களால் இத்தல இறைவனை பூசித்து தங்கள் பாவத்தை நீக்கி கொண்டனர். இக்காரணத்தால் இத்தலம் வேதபுரி எனவும் கௌதமி நதி தீரத்தில் அத்திரேய குலத்தில் உதித்தவருமான சாட்டியமுனி என்பவர் பூசித்து பேருபெற்ற காரணத்தால் சாட்டியக்குடி எனவும் வழங்கலாயிற்று