இத்தலத்தில் உள்ள சிவபெருமானை தேவர்கள் வந்து வழிப்பட்டுள்ளனர் . தேவலோகத்திற்க்கு அதிபதியான இந்திர தேவரும், செல்வத்திற்கு அதிபதியான குபேரரும் இத்தலத்து இறைவனை வழிப்பட்டுள்ளனர். நவகிரகங்களில் ஒருவரான பிரகஸ்பதி என்கின்ற வியாழன் இப்புனித தலத்து இறைவனால் குரு பட்டம் பெற்றுள்ளார். மேற்குறிய காரணங்கலால் இத்தலத்தில் உள்ள ஈசன் தேவபுரீஸ்வரர் எனவும், இந்த இடம் தேவூர் எனவும் வழங்கப்பெற்றது. அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர், நாகப்பட்டினம் மாவட்டம்