அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் சிக்கப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் இச்சுற்றுப்புற பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில் ஆகும் இத்திருக்கோயிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிகின்றனர் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் நடைபெறும் உற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிக சிறப்பாக நடைபெறுகிறது